Load Image
dinamalar telegram
Advertisement

ஒரு தமிழச்சி சிந்திக்கிறாள்!

* முதல்வர் உத்தரவிட, நடிகை மீனாவின் கணவருக்கு மாற்று இதயம், நுரையீரல் தேடி இந்தியா முழுக்க தமிழக அரசு தீவிரமாய் முயற்சித்தும் பலனில்லையாம்! ஏங்க.. 'எல்லாருக்கும் எல்லாமும்'னு சொல்றீங்களே... தமிழகத்துல 'உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை'க்கு காத்திருக்கிற ஒவ்வொரு உயிர் காக்கவும் இதேமாதிரி முயற்சி எடுப்பீங்களா?

* மாதம் 12 ஆயிரம் ரூபாய் மதிப்பூதியத்தில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், பொதுத்தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்த வேண்டும்; சபாஷ்... 'அனைவரும் சமம்' என்பதை 'சீருடை' மூலம் மாணவர்களுக்கு உணர்த்தும் கல்விக்கூடத்தில், 'தற்காலிக ஆசிரியர், நிரந்தர ஆசிரியர்' எனும் பாகுபாடு; ம்ஹும்... சொல் வேறு, செயல் வேறு; 'திராவிட மாடல்' பிரமாதம்!

* 'தமிழகத்துக்கு இணையான கல்விக் கொள்கை வேறு எந்த மாநிலத்திலும் கிடையாது; இந்தியாவின் தலைசிறந்த 100 கல்லுாரிகளில் 30 தமிழகத்தில்தான் இருக்கிறது!' - முதல்வர். இப்படி அறிவூட்டுற கல்விக்கூடங்கள்ல ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு தேவைப்படுறதுக்கும், ஆசிரியர் மேல பாலியல் புகார் வர்றதுக்கும் என்னய்யா காரணம்?

* 'மழை, மண்ணின் ஈரம் - இந்த ரெண்டும்தான் 50 ஆண்டு பழமையான மரம் சரிந்து வங்கி அதிகாரி பலியாகக் காரணம்'னு உடனடியா சென்னை மேயர் உண்மையை கண்டுபிடிச்சு சொல்றார்னா, வரக்கூடிய மழைக்காலத்துல மரம் சாய்ந்து எந்த ஒரு விபத்தும் சென்னையில நிகழாம நிச்சயம் அவர் தடுப்பார்; சரிதானே மேடம்?

வருமுன் காக்கும் தமிழகம்!

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement