Load Image
dinamalar telegram
Advertisement

அன்புள்ள சிஸ்டர்!

'எப்படி இருக்கீங்க?' இவ்விரு வார்த்தைகள் போதும்... செவிலியரின் மனம் நிறைக்க! ஆனால், ஒருபோதும் அல்லது பெரும்பாலும், அவர்களிடம் நாம் இப்படி கேட்பதே இல்லை!

'இது ஏன்?'னு யோசிச்சிருக்கீங்களா கீதா?
'இதுவும் ஒரு வேலைதானே...' ன்னு நினைக்கிறதால யாரும் இப்படி எங்களை கேட்கிறதில்லை; 'எதுவும் கடந்து போகும்'னு இந்த பணி அனுபவம் கத்துக் கொடுத்திருக்கிறதால எங்களுக்கு இதுல வருத்தம் இல்லை! திருப்பூர், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் செவிலியாக பணியாற்றும் கீதா சோமசுந்தரத்திற்கு வயது 50.

பணி துவக்கம்: 2002ம் ஆண்டு
முதல் களம்: அரசு மருத்துவமனை, சங்கரன்கோவில்.
துறை அனுபவம்: 20 ஆண்டுகள்

என் வெறுப்பு
கணவன் மருத்துவமனை படுக்கையில; சலனமில்லாம மனைவி; காரணம் கேட்டேன்... 'தினமும் குடிச்சுட்டு வந்து அடி, உதை; இவன் பிழைச்சா இன்னும் எனக்கு வேதனைதான்!'னு அவ சொன்னா! ப்ப்ச்ச்... இந்த கொடுமை இம்மண்ணிற்கான சாபம்!

அந்த ஒருநாள்
2017ம் ஆண்டு; என் கணவர்கிட்டே இருந்து அவசர அழைப்பு; அவரை நான் பார்த்தப்போ, அவரோட கால் எலும்பு துண்டா தொங்கிட்டு இருந்தது. நான் துளியும் பதற்றப்படலை. முதலுதவியை ஆரம்பிச்சேன். 'எப்படி உன்னால இப்படி இருக்க முடியுது'ன்னு குடும்பத்துல யாரும் என்னை கேட்கலை. முழுமை பெற்ற செவிலியா என்னை நான் உணர்ந்த நாள் அது!

கோழைகளே...
'இன்னும் ஒருநாள் வாழ்ந்திட மாட்டோமா?'ன்னு ஏங்குற உயிர்களுக்கு மத்தியில, தன்னை அழிச்சுக்க முயற்சி பண்றவங்களைப் பார்த்தா எனக்கு அழுகையும் வரும்; பெரும் கோபமும் வரும்!

பதில் என்ன?
பணம் கொடுத்து வைத்தியம் பார்த்துக்கிற மருத்துவமனையை சுத்தமா வைச்சுக்க நினைக்கிறதும், இலவச சேவை தர்ற அரசு மருத்துவமனையை சீரழிக்கிறதும் சரியா?

பெண் என்பவள்...?
ஒரு ஆண் மருத்துவமனையில இருந்தா உறவுகள் திரண்டு வருது; ஒருத்தர் மாத்தி ஒருத்தர் ஓடியோடி கவனிச்சுக்கிறாங்க! இதுவே பெண்ணா இருந்தா, 'அவ இப்படி இருக்கிறதை பார்க்க முடியலை'ன்னு வர்றதை கணவர் கூட நிறுத்திக்கிறார். பரிதாபத்திற்குரியவள்... பெண். இந்த சூழல் மாறணும்!

என் வேண்டுகோள்
கையை அறுத்து ரத்தம் சிந்துற பழக்கம் நிறைய பேர்கிட்டே இருக்கு. அவங்களுக்கான என் வேண்டுகோள் இதுதான்... 'இன்னொரு முறை கோபம் வந்தா இங்கே வந்து ரத்தம் கொடுங்க; ஓர் உயிர் காப்பாற்றப்படும்!'

சுருக்!
'நாளை பார்க்கலாம்'னு சொல்ற மனிதனுக்கு 'இன்று வாழலாம்' எனும் நம்பிக்கை இல்லாம போறது ஏன்?

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement