தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு,
சிதிலமடைஞ்சு கிடக்கிற அரசு தொகுப்பு வீட்டுல வசிக்கிற ஏழைத்தாய் நான்! எனக்கு ஆதரவா இருந்த என் இளைய மகன் இறந்துட்டான்; காரணம், உங்க மின்வாரியத்தோட அலட்சியம்! கடந்த 5 ஆண்டுகளா தமிழக மின்வாரியம், சென்னை - எஸ்பிளனேடு உட்கோட்டம், முத்தியால்பேட்டை பிரிவுல உதவியாளரா ஒப்பந்த அடிப்படையில அவன் வேலை பார்த்துட்டு இருந்தான்!
சம்பவம் நடந்த ஜனவரி 22, 2022 அன்னைக்கு, 'முத்தியால்பேட்டை, கச்சாலீஸ்வரர் கார்டன் பகுதியில மின்பிரச்னை'ன்னு அழைப்பு வந்தது. வாரிய பணிகளுக்காக பள்ளம் தோண்டுறது, மின்கம்பி பிரிக்கிறது, மின்கம்பத்தை பதிக்கிறது அவனோட வேலை. அன்னைக்கு... மின்பெட்டி பழுது நீக்குற பணியில அவனை ஈடுபடுத்தியிருக்காங்க; மின்சாரம் தாக்கி இறந்துட்டான்!
'இழப்பீட்டு தொகையா ரூ.5 லட்சம் தர்றோம்; மேல் நடவடிக்கை வேண்டாம்'னு சமரசம் பேசி, மின்வாரிய அதிகாரிகள் கையெழுத்து போட்டு வாக்குறுதி கடிதம் தந்தாங்க; ஆனா, ஒரு மாதம் கழிச்சு, 3 லட்சம் மட்டும் தந்துட்டு, 'இவ்வளவுதான் முடியும்'னு அந்த கடிதத்தை கேட்டாங்க; நான் கொடுக்கலை; மீதி பணத்தை அவங்க இன்னும் தரலை!
'சமூக நீதி' ஆட்சியில ஏழைகள் உயிருக்கு மதிப்பு கிடையாதா?
- மின்சாரம் தாக்கி உயிரிழந்த ஒப்பந்த ஊழியரான 33 வயது அருள்பதியின் மரணத்திற்கு நீதி கேட்கும் தாய் விஜயா, செய்யூர், செங்கல்பட்டு.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!