Load Image
dinamalar telegram
Advertisement

இதயத் திருடி!

கடை திறக்க நேரமாகி விட்டது. அவசரமாக இரண்டு இட்லிகளை விழுங்கிக் கொண்டிருக்கையில் கைபேசி பாடத் துவங்கியது. ஸ்பீக்கர் போட்டுக் கொடுத்தாள் மனைவி சகுந்தலா.

எதிர்முனையில் நண்பன் சங்கர்; 'ஜவுளிக்கடை முதலாளி ஆனதுக்கப்புறம் கண்டுக்கவே மாட்டேங்குறியே குமாரு' சாம்பிராணி போட்டவன், 'என் பொண்ணு கவிதாவுக்கு கேரளாவுல தனியார் மருத்துவக் கல்லுாரியில சீட் கிடைச்சிருக்கு; ஒரு ரெண்டு லட்சம் குறையுது... நீ கொடுத்தா நான் கொஞ்சம், கொஞ்சமா கடனை அடைச்சிருவேன்!' - தயங்கினான்.

அவனுக்கு உறுதி கொடுத்தபின் பணம் எண்ண, கையிருப்பில் ஒரு லட்ச ரூபாய் குறைகிறது! 'என்ன செய்யலாம்?' - யோசிக்கையில்...
தாலிக்கொடியை கழற்றிய சகுந்தலா, 'ஒரு குழந்தை படிப்புக்கு உதவாத தங்கம் இருந்து என்ன பிரயோஜனம்?' என்றாள். அடகுக்கடைக்கு புறப்பட்டேன்.
'என்னங்க... என்னங்க...' - சகுந்தலாவின் குரல்; ஆழ்ந்த கனவில் இருந்து விழித்தேன். 'சீக்கிரம் ரெடியாகுங்க; லேட்டா போனா துணிக்கடைக்காரன் வேலையை விட்டு துாக்கிடப் போறான்!' - பிள்ளை வரத்திற்காக சாமி படத்துக்கு முன் நின்று, அழுக்குப் படிந்த மஞ்சள் கயிறை ஏந்தி கண்களில் ஒற்றிக் கொண்டிருந்தாள். நானோ இமைகள் மூடி அவளை ஒற்றிக் கொண்டேன்!
கனவிலும் நிஜத்திலும் ஆணின் சாமி... பெண்.

படைப்பு: 'நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்...' சிறுகதை
எழுதியவர்: மேஜர் முருகன்
வெளியீடு: டிஸ்கவரி

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • Manian - Chennai,ஈரான்

    தாலிக்கு தங்கம் படிக்கவும் அடகு வைக்கலாம், அடிக்கவும் குடிக்க ஒதவும் என்று ஆனையடி ஐயன் சொந்தது எவ்ளோ உண்மை ஆனா அந்த தங்கம் அரசியல்வாதிகளின் பையிலே போகுதே என்று எண்ணான் சங்கர். கண்ணீரே சட்டைப் பையை நிறைத்தது.

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement