நேரம் நிற்பதில்லை!
மனிதா
நேரத்தை வீணாக்காதே
ஒவ்வொரு நொடியும்
உயிர் நாடி!
ஒரு மணி நேரத்தில்
கழிந்து போவது
நிமிடங்கள் மட்டுமல்ல
ஒவ்வொரு உயிரின்
வாழ்நாள்!
நேரம் சரியில்லையென
வேலையைத் தள்ளிப்போடுவது
சோம்பேறிகளின் வேலை!
நல்லது செய்ய
நல்ல நேரம் தேவையில்லை
நல்லது செய்யும்போதெல்லாம்
நல்ல நேரம் தான்!
ஓடும் கடிகாரம்
நின்று போனாலும்
நேரம் நிற்பதில்லை!
உட்கார்ந்திருந்தாலும்
உனக்கான நேரம்
ஓடிக்கொண்டுதான் இருக்கிறது
ஒருபோதும்
ஓய்வெடுப்பதில்லை காலம்!
நாளை மீது
நம்பிக்கை வைப்பதில்
தவறில்லை...
நாளை பார்த்துக் கொள்ளலாம் என்று
நாட்களை தள்ளிப் போடுவது தான்
தவறு!
நாளை என்பது
இன்றே கூட
இல்லாமல் போகலாம்!
மரணம் போலத்தான்
மணித்துளியும்...
இழந்தால் மீண்டும் வராது
இருக்கச் சொன்னால்
சரி என்று நிற்காது!
பி.சி. ரகு, விழுப்புரம்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!