Load Image
dinamalar telegram
Advertisement

ஒரு தமிழச்சி சிந்திக்கிறாள்!

* 'சாதி, மதம், நிறம், பாலின வேறுபாடுகள் குருதிக்கொடைக்கு இல்லை; குருதிக்கொடை அளித்து மனித உயிர் காப்போம்; மானுடம் தழைக்கச் செய்வோம்!' - இப்படி மானுடம் தழைக்க ஆசைப்படுற முதல்வர், 'மது ஒழித்து மானுடம் காப்போம்'னு ஏன் சொல்றதில்லை; 'சொல் வேறு... செயல் வேறு'ங்கிறது திராவிட மாடலுக்கு அழகா?

* மாநில கல்விக் கொள்கை வடிவமைப்பு குழு, பள்ளி, கல்லுாரி, மாணவர்களின் கருத்துக்களை கேட்டு வெளிப்படையா அறிக்கை தயார் பண்ணப் போகுதாம்! சரி... தேடிப்போற இடத்துல, 'தேசிய கல்விக் கொள்கை போதும்; எங்களை தனிமைப்படுத்தி விடாதீர்கள்'னு மாணவர்கள் சொன்னா, அறிக்கை அதை சொல்லும்தானே!

* இலங்கைக்கே நேசக்கரம் நீட்டின தமிழக அரசு, பல துயர சம்பவங்களுக்கு காரணம்னு பூட்டப்பட்டு, இப்போ விற்பனைக்கு வந்திருக்கிற துாத்துக்குடி 'ஸ்டெர்லைட்' ஆலை நிர்வாகத்திடம் போய் 12 தமிழர்கள் உதவி கேட்கிறதை அனுமதிக்கிறது ஏன்; தந்தை ஸ்தானத்துல முதல்வர் இருக்குறப்போ 'உதவி'ன்னு தமிழன் இப்படி அலையலாமா?

* 'என் முதல்வர் கனவை சிதைத்த ஓ.பி.எஸ்., எனக்கு ஆதரவு தரும்படி செய்வேன்; அவர் கூடாரம் கலைப்பேன்; அவரை தனி மரமாக்குவேன்; அ.தி.மு.க.,வை இயக்கும் சக்தியாகி, கட்சியை என் அதிகாரத்திற்குள் நிச்சயம் கொண்டு வருவேன்!' - பிப்ரவரி 15, 2017ல் ஜெயலலிதா சமாதியில் சசிகலா செய்த சபதம் இப்படியாக இருக்குமோ!
ஆத்தி... மறுபடியும் முதல்ல இருந்தா...

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement