Load Image
dinamalar telegram
Advertisement

ரவுத்திர வீணை!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு,

கடந்த மார்ச் 7, 2022; நீங்க துாத்துக்குடி வந்தப்போ மாற்றுத்திறனாளி மகளோட, சாலையோரத்துல உங்களை சந்திச்சேன்... ஞாபகம் இருக்குங்களாய்யா?
என் பொண்ணு தேசிய, மாநில, மாவட்ட அளவிலான தடகளத்துல ௬௭ தங்கம் ஜெயிச்சிருக்கிறா; 'யூ டியூப்' வீடியோக்கள் மூலமா நானும், சில தன்னார்வலர்களும் கொடுத்த பயிற்சி மட்டும்தான் இதுக்கு காரணம்!

'பயிற்சியாளர், விளையாட்டு உபகரணங்கள், ஊட்டச்சத்து உணவுகளுக்கான மாதாந்திர செலவுகளுக்கு வழிகாட்டுங்க'ன்னு 2021 ஜூலை 30ம் தேதி கீதாஜீவன் எம்.எல்.ஏ.,கிட்டே மனு கொடுத்தப்போ, சிறு நிதியுதவி கிடைச்சது. இதே கோரிக்கையை கனிமொழி எம்.பி.,கிட்டேயும் கடந்த ஏப்ரல்15ம் தேதி நேர்ல கொடுத்திருக்கேன்.

உங்க தனிப்பிரிவுக்கு அனுப்பின கோரிக்கைகளுக்கு பதிலே இல்லை! அய்யா... என்னால அலைய முடியலை! போட்டிகளுக்கு மகளை தயார்படுத்த ஆண்டுக்கு சில லட்சம் ரூபாய் தேவைப்படுற சூழல்ல, மாதம்தோறும் வரவாகுற மாற்றுத்திறனாளி உதவித்தொகையில உயர் பயிற்சிகள் சாத்தியப்படுமா?
'தேசிய அளவில் தங்கம் ஜெயிச்சுட்டு என்னைப் பார்க்க வரணும்'னு போற வழியில வாழ்த்திட்டுப் போன நீங்க, என் மக ஜெயிச்சு வர்றதுக்கு வழிகாட்டுவீங்களா?
- தடகள சாம்பியனான மாற்றுத்திறனாளி மகள் முத்துமீனாவிற்கு முறையான பயிற்சியும், உதவியும் கேட்கும் தாய் ஜெயலட்சுமி, துாத்துக்குடி.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement