Load Image
dinamalar telegram
Advertisement

திருமதி விவசாயி!

'விவசாயத்தில் 20 ஆண்டுகள் அனுபவம்!' - மலர்ச்சியுடன் பேசுகிறார் மகாலட்சுமி.

வயலுக்கு வந்த வழி
ஜவுளி ஏற்றுமதி... குடும்பத் தொழில்; அதுல எனக்கு 15 ஆண்டு அனுபவம்; 'மாறுபட்ட அணுகுமுறைகள் சந்தைப்படுத்துதலுக்கு முக்கியம்'னு இந்த தொழில் கத்துக் கொடுத்தது. விவசாயத்தை கைவிட்ட கணவரோட குடும்பம் மூலமா பாரம்பரிய நெல் ரகங்களோட பலன்களை தெரிஞ்சுக்கிட்டேன்; வயலுக்கு வந்துட்டேன்!

'அரிதான நெல் ரகங்களை மீட்டெடுத்து, உற்பத்தியை பெருக்கி மதிப்புக்கூட்டல் முறையில சந்தைப்படுத்தணும்' - இந்த கனவோட 4 ஏக்கர் நிலத்துல இறங்கினேன். ஆள் பற்றாக்குறை, அதிகப்படியான கூலி, எதிர்பார்த்த மகசூல் கிடைக்காததுன்னு முதல் முயற்சியில சூடு! வணிக களம் தந்த 'திட்டமிடல்' அனுபவம் கைகொடுக்க... அடுத்த மகசூல் அபாரம்!

முதல் ஆள்
எங்க கிராமத்துல 'பண்ணை குட்டை' அமைச்சிருக்கிற முதல் ஆள் நான்! 'பிசினி, பூங்கார், ரத்தசாலி, பால்குட வாழை, காலாநமக்'னு அரிதான பாரம்பரிய நெல் ரகங்களை பயிரிட்டு தமிழகம் முழுக்க அரிசி அனுப்புறேன்.

அரசுக்கு ஒரு வேண்டுகோள்...
வாழ்வாதாரமான விவசாயத்தை செயல்முறை கல்வியாக பள்ளிகளில் கொண்டு வர வேண்டும்!

கணவர்: நரசிம்மன்
படிப்பு: எம்.எஸ்சி.,
சைக்காலஜி
வயது: 57

காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலையில் 5 கி.மீ., உள்ளது இவரது மலையாங்குளம் கிராமம்

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement