நீங்கள் ஆறு ஆண்டுகளுக்கு மேல், 'யு டியூப் பிரீமியம்' பயனாளியாக இருந்தால், உங்களுக்கு ஓராண்டு சந்தாவை இலவசமாக வழங்க இருப்பதாக யு டியூப் தெரிவித்துள்ளது.
அதாவது, '9 டூ 5 கூகுள்' ரிப்போர்ட் படி 2,222 நாட்கள் அல்லது 32 லட்சம் நிமிடங்களுக்கு அதிகமாக யு டியூப் பிரீமியம் சந்தாதாரர்களாக இருப்பவர்களுக்கு, ஓராண்டு சந்தா இலவசமாக வழங்கப்படும் என தெரிகிறது.
இதன் வாயிலாக, யு டியூப்பில் விளம்பரம் இல்லாமல் பார்க்க அல்லது கேட்க முடியும். மேலும், பின்னணியில் இயங்கும்படியும் செய்துகொள்ள முடியும்.
யு டியூப் நிறுவனம், 2015ம் ஆண்டில் சந்தா சேவையை துவங்கியது. பின் 2018ல், யு டியூப் பிரீமியம் என ரீபிராண்டு செய்யப்பட்டது.
இதற்கு நீங்கள் தகுதியானவரா என்பதை எப்படி அறிந்து கொள்வது?
உங்கள் ஸ்மார்ட் போனில், யு டியூப் செயலியை ஓப்பன் செய்து, அதன் வலது மூலையில் இருக்கும் உங்கள் புரொபைலை கிளிக் செய்யவும். அதில் 'யு டியூப் பிரீமியம் பெனிபிட்ஸ்' பகுதிக்கு செல்லவும்.
அங்கு நீங்கள் எப்போது இருந்து பிரீமியம் மெம்பராக இருக்கிறீர்கள் என்பதை காட்டும்.
வாய்ப்பிருப்பின், ஓராண்டு இலவச சந்தாவை பெற்றுக் கொள்ளுங்கள்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!