Load Image
dinamalar telegram
Advertisement

'எக்ஸ்பாக்ஸ்' விலை அதிகரிப்பு

'மைக்ரோசாப்ட்' நிறுவனத்தின் 'எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் எஸ்' சாதனத்தின் விலை, இந்தியாவில் உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த விலை உயர்வு, இம்மாதம் 30ம் தேதியிலிருந்து அறிமுகம் ஆகும் என தெரிகிறது.

தற்போது 34 ஆயிரத்து 990 ரூபாயாக உள்ள எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் எஸ், 36 ஆயிரத்து 990 ரூபாயாக உயர்கிறது; கிட்டத்தட்ட 6 சதவீத உயர்வு இது. இதேபோல் 'எக்ஸ்பாக்ஸ் ஒயர்லெஸ் கன்ட்ரோலர்' விலை 5,390 ரூபாயிலிருந்து, 5,590 ரூபாயாக உயர்கிறது. மேலும் 'எக்ஸ்பாக்ஸ் ஒயர்லெஸ் ஹெட்செட்'டின் விலை 8,990 ரூபாயிலிருந்து, 9,490 ரூபாயாக அதிகரிக்கிறது.

இருப்பினும், இந்த விலை அதிகரிப்புக்கான காரணம் எதுவும் கூறப்படவில்லை. உலகெங்கும் பணவீக்கம் அதிகரித்துள்ளதை அடுத்து, அதை சமன் செய்யும் முயற்சியே இந்த விலை உயர்வு என்கின்றனர், இத்துறையை சார்ந்தவர்கள்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement