அண்மைக் காலமாக, பல புதிய வசதிகளை தொடர்ந்து வாரி வழங்கிக் கொண்டிருக்கிறது 'வாட்ஸ் ஆப்!' அந்த வரிசையில் தற்போது புதிதாக, சில வசதிகளை அறிமுகம் செய்து உள்ளது.
வாட்ஸ் ஆப் குழு அழைப்புகளின் போது, குறிப்பிட்ட நபரை 'மியூட்' செய்து கொள்ளக்கூடிய வசதியை அறிமுகம் செய்து உள்ளது.
சமீபத்தில் 32 நபர்கள் வரை குழு அழைப்புகளில் சேர்க்கலாம் என அறிவித்திருந்த நிலையில், இப்போது கூடுதலாக இத்தகைய வசதியையும் வழங்கி உள்ளது. மேலும், நம் டி.பி., படத்தை யார் பார்க்கலாம் என்பதையும் நாமே தீர்மானித்து கொள்ள முடியும்.
அத்துடன் நாம் கடைசியாக பார்த்தது, புரொபைல் போட்டோ ஆகியவற்றை, நம் கான்டாக்ட் லிஸ்டில் இருப்பவர்களிலும் சிலரை பார்க்க அனுமதிக்காமல் செய்து கொள்ள முடியும்.
இதற்காக 'மை கான்டாக்ட் எக்ஸெப்ட்' எனும் புதிய வசதியும் சேர்க்கப்பட்டு உள்ளது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!