Load Image
dinamalar telegram
Advertisement

30 மணி நேரம் தாங்கும் 'நாய்ஸ்' இயர்பட்ஸ்

கிட்டத்தட்ட 30 மணி நேரம் தாக்குப்பிடிக்கும் பேட்டரியுடன் கூடிய, 'ட்ரூ ஒயர்லெஸ்' இயர்போனை, 'நாய்ஸ்' நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

'நாய்ஸ் பட்ஸ் வி.எஸ்., 104' எனும் பெயரில் அறிமுகம் ஆகியிருக்கும் இந்த, ட்ரூ ஒயர்லெஸ் ஸ்டீரியோ இயர்போனை, ஒரு முறை சார்ஜ் செய்தால், 30 மணி நேரம் வரை பயன்படுத்தலாம்.
முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இந்த இயர்போன், 'டச் கன்ட்ரோல்' வசதியுடன் வந்துள்ளது. இதில் 13 மி.மீ., டிரைவர்கள் இடம்பெற்றுள்ளன.

தண்ணீர் புகுவதை தடுக்கும் அமைப்பு கொண்ட இந்த இயர்போனில், 'வி5.2 புளுடூத்' இணைப்பு வசதி இடம்பெற்று உள்ளது.

யு.எஸ்.பி., டைப் சி போர்ட் வாயிலாக 10 நிமிடம் சார்ஜ் செய்தால், தாராளமாக இரண்டு மணி நேரம் வரை பயன்படுத்தலாம்.

விலை: 1,499 ரூபாய்

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement