'சென்ஹைசர்' நிறுவனம், புதிதாக ஓர் 'இயர்பட்ஸ்' குறித்து அறிவித்திருக்கிறது. இது சந்தையில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. 'சென்ஹைசர் டிவி கிளியர்' எனும் பெயர் கொண்ட இந்த இயர்பட்சை, ஸ்மார்ட்போன் ஹெட்செட்டாக மட்டுமின்றி; டிவிக்கான ஹெட்போனாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
'டிவி' நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டிருப்பதிலிருந்து மிக எளிதாக போன் அழைப்புக்கு மாறிக்கொள்ளலாம். அல்லது போனில் பாட்டு கேட்குமாறு மாற்றிக் கொள்ளலாம். டிவியுடன் இந்த ஹெட்செட் இணைக்கப்பட்டிருந்தாலும், புளுடூத் இணைப்பை தனியாக பயன்படுத்தி கொள்ள முடியும் என்பது தான் இதில் சிறப்பு.
டிவி ஆடியோவை இணைப்பதற்காக, சென்ஹைசருக்கு என தனியாக ஒரு 'ஒயர்லெஸ் டிரான்ஸ்மிட்டர்' வழங்கப்படுகிறது. இதனால், நம் புளுடூத் இணைப்பை தனியாக பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த அறிமுகத்தால், ட்ரூ ஒயர்லெஸ் இயர்பட்சில், புளுடூத் இணைப்பை பயன்படுத்தும் தொழில்நுட்பத்தில், மேலும் பல மாற்றங்கள் நிகழ வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!