Load Image
dinamalar telegram
Advertisement

300 முகத்தோற்றங்கள்

அண்மைக் காலமாக இந்தியாவில் ஸ்மார்ட் வாட்ச் விற்பனை அதிகரித்து வருகிறது. பல நிறுவனங்கள் போட்டி போட்டு, புதிது புதிதாக வாட்சுகளை அறிமுகம் செய்து வருகின்றன. இந்த வகையில் உள்நாட்டு நிறுவனமான, 'பிடிரான்,' புதிய வாட்ச் ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளது.

'பிடிரான் போர்ஸ் எக்ஸ் 10 இ' எனும் இந்த புதிய வாட்ச், 1.7 அங்குலம் சதுர வடிவம் கொண்டதாகும். 'எச்.டி., டிஸ்ப்ளே' கொண்ட இந்த வாட்சின் முகத்தோற்றத்தை 300 விதமாக மாற்றிக் கொள்ளலாம்.

மற்றபடி, இதர வாட்சுகளில் இடம்பெற்றிருக்கும் வழக்கமான அனைத்து வசதிகளும் இதிலும் இடம்பெற்றுள்ளன. ஒரு முறை சார்ஜ் செய்தால், 12 நாட்கள் வரை இதன் பேட்டரி தாக்குப் பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

விலை: 1,899 ரூபாய்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement