Load Image
dinamalar telegram
Advertisement

திசை மாறும் பறவை

'போல்டபிள்' ஸ்மார்ட்போன் சந்தையில், 'சாம்சங் கேலக்ஸி இசட் பிளிப் 3' போன் சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கிறது. நடப்பு ஆண்டில், மார்ச் மாதம் வரையிலான மூன்று மாத காலத்தில், அதிகம் விற்பனை ஆனபோல்டபிள் ஸ்மார்ட்போன், சாம்சங் கேலக்ஸி இசட் பிளிப் 3. மொபைல் போன் சந்தையில் சாம்சங்கின் பங்களிப்பு 74 சதவீதமாக குறைந்துவிட்ட போதிலும், போல்டபிள் போன் பிரிவில் தொடர்ந்து 51 சதவீத பங்களிப்புடன் முன்னிலை வகித்து வருகிறது.

இரண்டாவது இடத்திலும் சாம்சங் நிறுவனமே உள்ளது. 'கேலக்ஸி இசட் போல்டு 3' இரண்டாவது இடத்திலும்; மூன்றாவது இடத்தில், 'ஹூவாவே பி 50' போனும் உள்ளன. இந்த மூன்று போன்களும் சேர்ந்து, 91 சதவீத பங்களிப்பை வழங்கி வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, சாம்சங் விலை உயர்ந்த போன்களில் அதிக கவனம் செலுத்தும் முடிவுக்கு வந்துள்ளது.

அண்மையில் 'பியூச்சர்' போன் தயாரிப்பை நிறுத்திக் கொள்வதாக சாம்சங் அறிவித்தது நினைவிருக்க கூடும். பறவை திசை மாறுகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement