தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு,
அரசு ஊழியர்களோட அலட்சியத்தினால, ஆட்டோ மேல மரம் விழுந்து பலியான திருநெல்வேலி உயிர்களோட குடும்பத்துக்கு ஆறுதல் அறிக்கை விடுற நீங்க, அரசு வாகனம் என் மகள் உயிர் பறித்த சம்பவத்துல இப்படி மவுனமா இருக்குறது ஏன்?
சம்பவம் நடந்த ஏப்ரல் 15, 2022 அன்னைக்கு 'புனித வெள்ளி' விடுமுறை; காலை 9:20 மணிக்கு, கல்லை பிரதான , வீதியில ஓரமா நடந்திட்டிருந்த என் மகள் மேல, அதிவேகமா வந்த அரசு ஜீப் மோதி விபத்து. பின்னந்தலையில பலத்த அடிபட்டதால சம்பவ இடத்துலேயே அவ உயிர் அடங்கிருச்சு. குழந்தையோட சடலத்தை வைச்சு போராட்டம் பண்ண விருப்பமில்லை;
அன்னைக்கே இறுதிச்சடங்கு பண்ணிட்டேன். அரசு விடுமுறை நாளான அன்னைக்கு விபத்தை ஏற்படுத்தினது TN 15 G 0114 எண் கொண்ட அரசு வாகனம். மூன்று பிரிவுகள்ல சங்கராபுரம் காவல் நிலையத்துல வழக்கு பதிவாகியிருக்கு!
அய்யா... ஏழை விவசாய குடும்பம் எங்களோடது; சிலம்பம், கராத்தேன்னு சாதிச்ச என் மகளை ஐ.ஏ.எஸ்., ஆக்கணும்னு கனவு; எல்லாம் போச்சு. இந்த மே 14ம் தேதி 10வது பிறந்த நாளை எதிர்பார்த்துட்டு இருந்தவ இறந்து, இன்னையோட 38 நாள்!
'திராவிட மாடல்' ஆட்சியில என் மகள் மரணத்துக்கு என்ன நீதி?
- அரசு விடுமுறை நாளில் அரசு அதிகாரி குடும்பத்தோடு பயணித்த அரசு வாகனத்தால் பலியான 9 வயது கோபிகாவின் தாய் சுமதி, சங்கராபுரம், கள்ளக்குறிச்சி.
தாயீ சுமதி: ஒரு சகோதரி கண்ணீர் சிந்துவது முதல்வருக்கே கண்ணில் ரத்தம் வரச்செய்து விட்டதே அவசரத்தில் பிரேக் போடுவதற்குப் பதில் ஓட்டுனர் வேக காலமுக்கிய, திடீர் என்ற கால் கெண்டை வலியால் செய்திருக்கலாம் என்கிறார் அண்ணா மருத்த பல்கலை கழக டீன் மருந்தழகர். இது பற்றி ரிப்போர்ட் தர நீதிபதி நேரடிமாறருக்கு உத்திரவு அனுப்பட்டுள்ளது.