Load Image
dinamalar telegram
Advertisement

மாண்புமிகு மாணவி!

வார்த்தைகள் மதிப்புமிக்கவை என்பதால், 'ஹைக்கூ' பதில்களாகவே சொல்கிறார்; இவர், கோவை மாவட்டம் பொள்ளாச்சி, சேத்துமடைக்காரர்!

யார் இவர்?
பெயர்: சித்தாரா
பெற்றோர்: அருள் கார்த்திகேயன் - காயத்ரி
வயது: 19, கல்லுாரி மாணவி

தந்தையின் வழியில் தன் 9 வயதில் கேமராவை கைகளில் ஏந்தியவர், தற்போது ஏழு சர்வதேச விருதுகள், 5 தேசிய விருதுகளுக்கு சொந்தக்காரர்; 'தேடலில்... கழுகும் நானும் ஒன்று' எனச் சொல்லும் கானுயிர் புகைப்பட கலைஞர்!

சித்தாரா பற்றி... 5 'க்ளிக்'
1. மனசோட விரல் பிடிச்சு நடக்குறதால உண்மையா இருக்குறேன்
2. உண்மையா இருக்குறதால தைரியத்தோட இயங்குறேன்
3. காட்டு உயிரினங்களோட தனித்துவத்தை தெரிஞ்சுக்க காத்திருக்க பழகியிருக்கேன்
4. இந்த பொறுமையால எதையும் ஆழமா உள்வாங்குறேன்
5. உண்மையும், பொறுமையும் இருக்குறதால சாதனை பண்றேன்... சந்தோஷமா இருக்குறேன்.

என் ஆசை
கானுயிர் புகைப்பட கலைஞர்களின் முதல் தேர்வான ஆப்பிரிக்க காடுகளைத் தவிர்த்து, இந்திய காடுகள் முழுக்க பயணப்பட்டு விலங்குகளை தேடித்தேடி படம் பிடிக்கணும்னு ஆசை.

எங்கள் சித்தாரா
'விருதுகளால் சலனப்படாதவள்; நேர மேலாண்மையிலும் படிப்பிலும் சிறந்தவள்!'

- ஐ.சாந்தகுமாரி, கல்வியாளர்.

Telegram Banner
Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • Manian - Chennai,ஈரான்

    ஆகா, அடுத்த படத்துக்கு கதை ரெடி சார் கமலு. ஊம் ஊம்.. பெயரே "நேர்மை ஒளி ஆரணங்கு”. யோவ் இது நம்ம ஊர் கதை இல்லையா? கமல் சார், சகதியிலே செந்தாமரை பூக்கலையா? மலைப் பாறையிலே தேன் கூடு கட்டலையா? சரி, இந்த படத்திலே ஆட் பாடல்கிடையாதா? குறிஞ்சுப் பூ போல ஒரு புகை பட கலைஞர் கதை. அபூ்வமான தமிழ் பெண்கதை. நிறுத்தையா. வாழ்த்துகள், ஒரு ஜோடி காஞ்சீவரம் பட்டு சல்வார்-கமீசு அனுப்புவோம். மக்கள் உண்மைய நம்பர காலமா இது? வற்றேன் சார். தாயீ சித்தாரா மதுரை மீனாட்சி ஒன்னிய காப்பாத்துவா. ஆசிகள். பழய போட்டோக்காரர் மடியேந்தி மாறன்.

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement