மவுசு குறையாத புதிய போக்ஸ்வேகன் விர்டுஸ் மிட் சைஸ் செடான் காரை பார்வையிடும் வாய்ப்பு வாடிக்கையாளர்களுக்கு கிடைத்துள்ளது. வரும் ஜூன் 8 வரை பார்வையிடலாம். இதற்காக நாடு முழுவதும் உள்ள 152 டீலர்ஷிப்களில் 'கஸ்டமர் பிரிவியூ' நடக்கின்றன. ஜூன் 9ல் விர்டுஸ் கார் விற்பனைக்கு வருகிறது. டைனமிக் லைன், பெர்பார்மென்ஸ் லைன் என இரண்டு வேரியன்ட்களில் கிடைக்கும்.
இதன் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின்,110 பிஎச்பி பவரையும், 175 என்எம் டார்க் திறனையும் வழங்கும். மற்றொரு 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின், 150 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் அளிக்கும். 6 ஸ்பீடு மேனுவல்/6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் /7 ஸ்பீடு டிசிடி கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும்
எல்இடி ஹெட்லேம்ப், 10 இன்ச் டச் ஸ்கிரீன் உடன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், 8.0 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், வயர்லெஸ் சார்ஜிங், ஆம்பியன்ட் லைட்டிங், ஹில் ஹோல்டு கன்ட்ரோல், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், முன்புறத்தில் வென்டிலேட்டட் இருக்கைகள், 6 ஏர்பேக்குகள், குரூஸ் கன்ட்ரோல், கீலெஸ் என்ட்ரி, ஸ்மார்ட்- டச் கிளைமேட்ரானிக் ஏசி, 8 ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம், ரிவர்ஸ் கேமரா, எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், எலெக்ட்ரிக் சன்ரூப் சிறப்பம்சம். ரூ. 11,000 செலுத்தி 'புக்கிங்' செய்யலாம்.
எதிர்பார்க்கும் விலை: ரூ. 11.50-18 லட்சம் (எக்ஸ்ஷோரூம்)
சென்னை டீலர்: Volkswagen Mountroad Sundaram motors - 99401 04703, 87544 40908
கோவை டீலர்: Ramani Volkswagen - 95007 01155
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!