Load Image
dinamalar telegram
Advertisement

சொகுசான... 'மெர்சிடிஸ்'

ஆடம்பர வசதிகளுடன் புதிய மெர்சிடிஸ் பென்ஸ் சி- கிளாஸ் சொகுசு செடான் கார் அறிமுகமாகியுள்ளது.

எல்இடி ஹெட்லைட்ஸ், 17/18 இன்ச் அலாய் வீல்கள், 12.3 இன்ச் டிஜிட்டல் டிரைவர் டிஸ்பிளே, எலக்ட்ரிக் சன்ரூப், 48 வோல்ட் மைல்ட்-ஹபிரிட் சிஸ்டம், 15 ஸ்பீக்கர் உடன் பர்ம்ஸ்டர் 3 டி சர்ரவுண்ட் சவுண்ட் சிஸ்டம், 11.9 இன்ச் எம்பக்ஸ் டச் ஸ்கிரீன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், இபிடி உடன் ஏபிஎஸ் பிரேக்கிங், டிராக் ஷன் கன்ட்ரோல், 8 ஏர் பேக்குகள், டூயல் ஜோன் கிளைமேட் கன்ட்ரோல், பனோரமிக் சிலைடிங் சன்ரூப், குரூஸ் கன்ட்ரோல் சிறப்பம்சம்.

இதன் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின்(சி 200) 204 பிஎச்பி பவரையும், 300 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 2.0 லிட்டர் 4 சிலிண்டர் டீசல் இன்ஜின்(சி 220டி) 200 பிஎச்பி பவரையும், 440 என்எம் டார்க் திறனையும் வழங்கும். மற்றொரு 2.0 லிட்டர் டீசல் இன்ஜின்(சி 300 டி), 265 பிஎச்பி பவரையும், 550 என்எம் டார்க் திறனையும் அளிக்கும். 9 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும். மைல்டு ஹைபிரிட் சிஸ்டத்துடன் இன்டக்கிரேட்டட் ஜெனரேட்டர் சிஸ்டம் உண்டு. 0-100 கி.மீ., வேகத்தை சி 300 டி வேரியன்ட், 5.7 வினாடிகளில் எட்டும்.

விலை: ரூ.55-61 லட்சம் (எக்ஸ்ஷோரூம்)

சென்னை டீலர்:
Benz Sundaram Motors - 93840 58651,
Titanium Motors - 81908 10000

கோவை டீலர்:
Mercedes Benz Sundaram motors - 93848 35364

Telegram Banner
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement