Load Image
dinamalar telegram
Advertisement

ஒரு தமிழச்சி சிந்திக்கிறாள்!

* 'மக்களைத் தேடி மருத்துவம்' திட்டத்துல 60 லட்சம் தமிழக மக்களை பரிசோதிச்சதுல 24 லட்சம் பேருக்கு உயர் ரத்த அழுத்தம், 16.5 லட்சம் பேருக்கு நீரிழிவு, 12 லட்சம் பேருக்கு இவை இரண்டும்னு முடிவு! 60 லட்சத்துல 52.5 லட்சம் பேர் நோயோட வாழ்ற தமிழகத்துல இன்னும் என்ன சாதிக்கணும்னு அரசு 'டாஸ்மாக்' வணிகம் பண்ணுது!

* 'கொரோனா ஊரடங்கும், ஸ்மார்ட்போனுமே மாணவர் மனநிலையில் மாற்றம் வரக்காரணம்' - ஆசிரியர்கள். சரிங்க சார்... ஆசிரியர் போர்வையில மாணவியர்கிட்டே தப்பா நடந்துக்கிற அந்த உத்தமர் மனநிலைக்கும், பாதிக்கப்பட்ட மாணவி கதறுற வரைக்கும் அவனை கண்டுபிடிக்க முடியாத சக ஆசிரியர்கள் மனநிலைக்கும் என்ன காரணம்?

* 'கூடங்குளம் அணுக்கழிவுகளை ஒப்பந்தப்படி ரஷ்யாவிற்கு கொண்டு செல்ல வேண்டும்'னு ஆவேசப்படுற தோழர் திருமாவளவனுக்கு, 'இது சாத்தியமில்லை எனில் மக்கள் வசிக்காத பகுதியில் 'நிலத்தடி ஆழ்நிலை கிடங்கு' அமைத்து அணுக்கழிவுகளை நிரந்தரமாக சேமிக்கலாம்'னு நம்ம முதல்வர் பிரதமருக்கு யோசனை சொன்னது தெரியுமா... தெரியாதா!

* 'ஓர் ஆண்டு முழுக்க சினிமா பார்க்காவிடில் மக்கள் ஒன்றும் நோய் வந்து செத்துப் போய்விட மாட்டார்கள்!' - கமல்ஹாசன். 'ப்ளே ஆப் சுற்றுக்கு நாங்கள் தகுதி பெறவில்லையெனில் உலகம் அழிந்து விடாது!' - தோனி; சொல்லட்டுமே... அதுக்காக மானமுள்ள தமிழர்களாகிய நாம சினிமா, கிரிக்கெட் போதையை விட்ற முடியுமா!

இருள் கிழிப்போம்!

Telegram Banner
Advertisement
 

Home வாசகர் கருத்து (3)

  • Manian - Chennai,ஈரான்

    ' ஓர் ஆண்டு முழுக்க..' என்பது உடல் நோயைப் பற்றியதில்லை, "மன நோயை" பற்றியதே.

  • Manian - Chennai,ஈரான்

    ''கொரோனா..' இந்தக் கேள்வியை "ஆசிரியர்கள் ஐவர்" கழுவிடம் கேட்டோம். அவர்கள் பதிலும் யோசிக்கவைக்கிறதே- ஆசிரியர்களுக்கும், சுற்றி நின்றவர்களுக்கும் கொரோனா வியாதி, பயம், தாக்கம் காரணமாக, எதுவுமே நினைவில் இல்லை என்கிறார்களே பணி மூப்பு நீதிபதி கொரானா வெற்றி கொண்டான் அமெரிக்க ஆராய்ச்சி நிலையம் "மேயோ கிளினிக்" அரிசோனா, யூஎஸ்ஏ விஞ்ஞானி கிளிசாமியிடம் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிப்பார். கொரானா கண்டிப்பாக தண்டிக்கப்படும் கல்வி மந்திரி பொய்யா மொழிப் புலவர்.

  • Manian - Chennai,ஈரான்

    மக்களைத் தேடி மருத்துவம்' - பொதுவாக, இந்தியர்கள், ஆப்ரிக்கர்கள், தென் அமெரிக்கர்களுக்கு மரபணு கோளாறால் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு வருதாம். அப்ப அவங்களுக்கு பிறகு இலவசங்களுக்கு காசு வேணாமா? குடிப்பது ஜனநாயக உரிமை, டாஸ்மார்க்கா அவுன வூட்டுக்கு போயி அவினுகளை குடிக்க வலுக்கட்டாயமாக கூட்டியாரதா? டாஸ்மார்க் ஏழைகளின் ஜனநாயக சுராபானம்.

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement