தேவையானவை: பாதாம் பிசின் - ஒரு தேக்கரண்டி, சுண்டக் காய்ச்சி, குளிர வைத்த பால் - ஒரு டம்ளர், கண்டன்ஸ்டு மில்க் - கால் கப், நன்னாரி அல்லது ரோஸ் எசன்ஸ் - 2 தேக்கரண்டி, வெனிலா ஐஸ்கிரீம் - ஒரு கப்.
செய்முறை: பாதாம் பிசினை எட்டு மணி நேரம் ஊற விடவும். ஒரு டம்ளரில் பாதாம் பிசினை போட்டு, சுண்டக் காய்ச்சிய பால், நன்னாரி அல்லது ரோஸ் எசன்ஸ் சேர்த்து கலக்கவும். அதனுடன் கண்டன்ஸ்டு மில்க் சேர்க்கவும். மேலே வெனிலா ஐஸ்கிரீம் போட்டு சாப்பிட கொடுக்கவும்.
விருப்பப்பட்டால் துருவிய முந்திரி, பாதாமை மேலே துாவலாம்.
ஒரு ஜிகர்தண்டாவின் அடங்கவில்லை சுமார் ₹20/-தான். அதை மதுரை முழுதும் ₹.40/- முதல் ₹.60/- வரை விற்று மதுரை விளக்குத்தூண் பகுதியை சேர்ந்த ஒரு குறிப்பிட்ட குடும்பத்தினர் பகல் கொள்ளை அடிக்கின்றனர்....