சிலர், தங்கள் வீட்டு கதவில், 'இன்னும், 10 நாட்களுக்கு, இங்கு வரும் அஞ்சல்களை எதிர் வீட்டில் கொடுத்து விடுங்கள்...' என, அறிவிப்பை ஒட்டுவர். இப்படி செய்யக் கூடாது. மாறாக, அஞ்சல் அலுவலகம் மற்றும் வழக்கமான கூரியர் அலுவலகத்துக்கு தெரியப்படுத்தலாம்.
வீட்டில் உள்ள முக்கிய ஆவணங்களை, வங்கி லாக்கரில் வைப்பது இன்னும் சிறப்பு.
எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்களை திறந்தபடி போட்டு விட்டு கிளம்ப வேண்டாம். 'பர்க்ளர் அலாரம்' சி.சி.டி.வி., கேமரா போன்ற கருவிகளை பொருத்தி வைப்பது நல்லது.
வீட்டில் உள்ள நகைகளை வங்கி லாக்கரில் வைப்பது நல்லது. பீரோக்களின் சாவிகளை சுலபமாக யூகிக்கக் கூடிய இடங்களில் வைக்க வேண்டாம். அதே சமயம், எங்கே வைத்தோம் என மறந்து விடவும் வேண்டாம். வைத்த இடங்களை ஒரு தாளில் எழுதி, 'பர்சில்' எடுத்துச் செல்லவும்.
பயணத் தகவல்கள் மொபைல் போனில் இருந்தாலும், அவையும், வெளியூர்களில் சந்திக்க வேண்டியவர்களின் தொலைபேசி எண்களையும் ஒரு சிறு நோட்டு புத்தகத்தில் எழுதி எடுத்துச் செல்லலாம்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!