படத்தில் உள்ளவர் பெயர், சுலேகா பீவி. கேரள மாநிலம், கொல்லம் அச்சன்கோவிலை சேர்ந்தவர். இவருக்கு, 27 வயதானதும், இஸ்மாயில் என்ற யானை பாகனுக்கு திருமணம் செய்து வைத்தனர்.
யானையுடன் தோழமையாக, தன் கணவர் பழகுவதை பார்த்ததும், இவருக்கும், யானை பாகி ஆகும் ஆசை வந்தது.
தன் ஆசையை கணவரிடம் சொல்ல, அவரும் உற்சாகப்படுத்தினார். அக்கம்பக்கத்தினர் கேலி செய்த போதும், தன் முடிவை மாற்றிக் கொள்ளவில்லை, சுலேகா.
கணவரிடமிருந்து, யானைகளை பராமரிக்கும், பழக்கும் முறைகளை கற்றுக்கொண்டார். யானைகளும், இவரை, தன் எஜமானியாக ஏற்றுக்கொண்டன.
யானை மீது அமர்ந்து, பாகன்கள் செல்லும் நிலையில், யானையின் காது அல்லது தந்தத்தை பிடித்தபடி நடந்து செல்வார், சுலேகா.
இதில் இன்னொரு விசேஷம் என்னவென்றால், நாட்டின் முதல் யானை பாகி, இவர் தான்.
— ஜோல்னாபையன்
யானை(கணேசர்), இந்தம்மாவை தன் தாய்(பார்வதி) யாக பார்க்குமோ? யானையும் அன்புக்கு கட்டுபடும். அது அன்பில் மதம் பார்பதில்லை