Load Image
dinamalar telegram
Advertisement

ஒரு தமிழச்சி சிந்திக்கிறாள்!

* 'அரசு ஊழியர்கள்தான் அரசு'ங்கிறது முதல்வர் வாக்கு; தஞ்சாவூர் தேர் விபத்து விசாரணையில, 'கிராம மக்கள் மின்சாரத்தை நிறுத்தச் சொல்லாததால நாங்க நிறுத்தலை'ங்கிறது மின்வாரிய அதிகாரியோட பதில்; ஆக... இது அரசோட பதில்! மக்கள் சொன்னாத்தான் அரசு செய்யும்னா, 'டாஸ்மாக் ஒழிக்கப்படணும்'னு சொல்லிட்டே இருக்கோமே!

* செயின் பறிகொடுத்த சி.ஆர்.பி.எப்., வீரரோட மனைவிக்கு டி.ஜி.பி., போன்லேயும், மாவட்ட எஸ்.பி., நேர்லேயும் ஆறுதல் சொல்றாங்க; 'எல்லாருக்கும் எல்லாமும்'னு சொல்ற 'திராவிட மாடல்' ஆட்சியில, 'செயின் பறிப்பு' சம்பவத்துல பாதிக்கப்பட்ட அத்தனை பேருக்கும் இந்த ஆறுதலும், நம்பிக்கையும் கிடைக்குமா?

* சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை வளாக தீ விபத்தில் 128 நோயாளிகள் காப்பாற்றப்பட அரசுதான் காரணம்; முந்தைய அரசு அந்த கட்டடத்தை பராமரிக்காமல் இருந்ததே விபத்திற்கு காரணம். சரிங்க... இந்த விபத்து நிகழாம இருந்திருந்தா அந்த கட்டடத்துல இன்னும் நோயாளிகள் இருந்திருப்பாங்க; 'ஆமா'வா... 'இல்லை'யா?

* 'சமுதாயம் அறவழியில் இயங்குவதில் உங்களுக்கு பங்கு உண்டு'ன்னு ஆசிரியர்களுக்கு சொல்ற அமைச்சர் மகேஷ், 'தலைவன்' என்று சினிமா நடிகரை கொண்டாட அனுமதிக்காதீர்கள்; மதுவிற்கு எதிராக போராடும் குணத்தை மாணவர்களிடம் வளர்த்தெடுங்கள்'னும் சொல்லணும்தானே; இதுதானே அமைச்சருக்கான அறம்!
அகத்தின் அழகே... பேரழகு!

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement