Load Image
dinamalar telegram
Advertisement

கண்டதாலே கண்ணில்... 'மெரிடியன்'

கலக்கலான ஜீப் மெரிடியன் பிரீமியம் எஸ்யூவி.,க்கான புக்கிங் துவங்கியுள்ளது. ஜூன் மூன்றாவது வாரத்தில் டெலிவரி பணி துவங்கும். துவக்கத்தில் 7 சீட்டர் மாடலில் கிடைக்கும். பின் 6 சீட்டர் மாடல் அறிமுகம் செய்யப்படும்.

எல்இடி ஹெட்லேம்ப், மூன்று வரிசை இருக்கை, எல்இடி டெயில்லைட்கள், ரூப் ரெயில்கள், பனோரமிக் சன்ரூப், அலாய் வீல்கள், 10.25 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், 10.1 இன்ச் டச் ஸ்கிரீன் உடன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், பின் பக்க பயணிகளுக்கு 'ஏசி' வென்ட், யுஎஸ்பி சார்ஜிங் போர்ட், 360 டிகிரி கேமரா, டூயல் ஜோன் கிளைமேட் கன்ட்ரோல், 6 ஏர்பேக்குகள், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், இபிடி உடன் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார் சிறப்பம்சம்.

இதன் 2.0 லிட்டர் மல்டிஜெட் டீசல் இன்ஜின், 170 பிஎச்பி பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு மேனுவல் / 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன் கொடுக்கப்படலாம். 0-100 கி.மீ., வேகத்தை 10.8 வினாடிகளில் எட்டும். மணிக்கு 198 கி.மீ., வேகத்தில் செல்லும். இம்மாத இறுதியில் விலை அறிவிக்கப்படும்.

எதிர்பார்க்கும் விலை: ரூ. 35-38 லட்சம் (எக்ஸ்ஷோரூம்)

சென்னை டீலர்: VTK Jeep - 93840 05520

கோவை டீலர்: SRT Jeep - 73734 00000

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement