தேவையான பொருட்கள்:
நார்த்தங்காய் - 1
தக்காளி - 2
துவரம் பருப்பு வேக வைத்த நீர் - 2 கப்
இளம் இஞ்சி - 1 துண்டு
பெருங்காயம், மஞ்சள் துாள், மிளகாய் பொடி, கொத்தமல்லி பொடி - சிறிதளவு
கொத்துமல்லி தழை, உப்பு, கடுகு, வெந்தயம், நெய், தண்ணீர் - தேவையான அளவு.
செய்முறை:
நார்த்தங்காயில் விதையை நீக்கி, சாறு பிழியவும். பாத்திரத்தில், தண்ணீர் சூடானதும், நறுக்கிய தக்காளி, இஞ்சி, மஞ்சள், மிளகாய், கொத்துமல்லி பொடி, பெருங்காயம், உப்பு சேர்த்து, நன்கு கொதிக்க விடவும்.
வெந்தவுடன், துவரம் பருப்பு வேக வைத்த நீரை சேர்க்கவும். நுரைத்து வந்ததும் இறக்கி கடுகு, வெந்தயத்தை நெய்யில் தாளித்து கொட்டவும். நறுக்கிய கொத்தமல்லி இலையை துாவவும். பின், நார்த்தங்காய் சாறை கலக்கவும். சுவை மிக்க, 'நார்த்தங்காய் ரசம்!' தயார்.
வாசனை அருமையாக இருக்கும்; சோறுடன் பிசைந்து சாப்பிடலாம். பசி உணர்வை துாண்டும்; ஜீரண சக்தியை மேம்படுத்தும். காய்ச்சல் பாதிப்பால் கசந்த நாவின் சுவை மொட்டுகளை உயிர்ப்பிக்கும்!
- ராதிகா, சென்னை.
தொடர்புக்கு: 80720 84975
நார்த்தங்காய் ரசம்!
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!