dinamalar telegram
Advertisement

வீ டூ லவ் சிறுவர்மலர்!

Share

என் வயது, 66; சிறுவர்மலர் புத்தகம் பற்றி சிறப்பாக எடுத்து சொல்வதில், என் பேரன், பேத்தியருக்கு இணையாக யாரும் இல்லை.
இமயத்தில் கடை விரித்தாலும், தக்க சமயத்தில் உரிய விளம்பரம் தேவை என்பதை, வீட்டில் வாரம் தோறும் நிறைவேற்றி வருகின்றனர்.
எல்லா நாட்களும், தினமலர் நாளிதழ் வருகைக்காக அதிகாலையே காத்திருப்பேன். சனிக்கிழமைகளில் பேரன், பேத்தியர் முந்திவிடுவர்.
போட்டி போட்டபடி எடுத்து வந்து, நாளிதழை மட்டும் தந்து, 'தாத்தா... சிறுவர்மலர் புத்தகத்தில் படக்கதை, பரிசு பகுதி, சிறுகதை, அதிமேதாவி அங்குராசு, உங்கள் பக்கம் எல்லாம் இருக்கு...' என மகிழ்ச்சியில் குதித்தபடி படிப்பர்.
இதைக் கண்டு, எல்லையில்லா மகிழ்ச்சியடைவேன். சிறுவர்களுக்கு மட்டுமல்ல, அனைத்து வயதினருக்கும் ஏற்ற வகையில் உள்ள ஒரே இதழ் சிறுவர்மலர் தான்.
தினமும் எத்தனையோ மலர்கள், மலர்ந்து வாடுகின்றன. ஆனால், வாரம் ஒருநாள் மலர்ந்து, என்றும் வாடாமல் மகிழ்ச்சி தருகிறது, சிறுவர்மலர் இதழ்!
- சி.தியாகராஜன், கோவை.
தொடர்புக்கு: 98437 54670

Share
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement