dinamalar telegram
Advertisement

பிறர் நலன்!

Share

கோவில் வாசலில், பிச்சை எடுத்தவன், அங்கு வந்த மகானிடம், 'என் வாழ்க்கை கடைசி வரை இப்படி தான் இருக்குமா...' என கவலையுடன் கேட்டான். 'அது தலையில் எழுதிய விதி; இப்படி தான் இருக்கும்...''தலை விதியை மாற்ற என்ன செய்ய வேண்டும்...' 'கடவுளைப்----- ---------------------பார்த்தால் மாற வாய்ப்பு உண்டு...' கடவுளை தேடிப் புறப்பட்டான், பிச்சைக்காரன். வெகுநேரம் நடந்து களைப்படைந்தவன், செல்வந்தர் வீட்டின் கதவை தட்டி, 'ஐயா... இரவு தங்க அனுமதிக்க வேண்டும்...' என்றான்.'நீ எங்கு செல்கிறாய்...' எனக் கேட்டார் செல்வந்தர்.விஷயத்தை சொன்னான். உடனே செல்வந்தர், 'என் மகள் பிறவியிலே வாய்பேச முடியாதவள்... எப்போது பேச்சு வரும் என்பதை கடவுளிடம் கேட்டு வருவாயா...' என்றார். சம்மதித்து, அங்கு ஓய்வு எடுத்தான்.மறுநாள் ஒரு மலை அடிவாரத்துக்கு வந்தான். அதை கடக்க வழி தெரியாமல் தவித்தவன், அங்கு வந்த மந்திரவாதியிடம் உதவி கேட்டான். 'மந்திரக்கோலால் மலையை கடக்க வைக்கிறேன்; பிரதிபலனாக ஓர் உதவி செய்வாயா...' எனக் கேட்டார் மந்திரவாதி. 'என்ன வேண்டும்...' 'கடும் தவம் செய்தும், 500 ஆண்டுகளாக முக்தி அடையாமல் உள்ளேன்; முக்திக்கான வழியை கடவுளிடம் கேட்டு சொல்...' என்றார். சம்மதித்து மலையை கடந்தான். குறுக்கே ஆறு பாய்ந்தது. அதை கடக்க உதவிய ஆமை, பறக்கும் சக்தியை கடவுளிடம் வாங்கித் தரக் கேட்டது. சம்மதித்து நடந்தவன் கடவுளைக் கண்டான்.அவனிடம், 'மூன்றே கேள்வியில் வேண்டிய வரத்தைக் கேள்...' என்றார் கடவுள். 'நான்கு கேள்விகள் இருக்கிறதே' என திணறியவன் பின் தீர்க்கமாக, 'பிச்சை எடுத்து என் காலத்தை ஓட்டி விடலாம்; அந்த, மூன்று பேரின் பிரச்னையாவது தீரட்டும்' என, மூவருக்கும் பதில் பெற்று திரும்பியவனிடம், 'என்ன சொன்னார் கடவுள்...' எனக் கேட்டது ஆமை.'முதுகில் உள்ள ஓட்டை கழட்டி எறிந்தால், பறக்கும் சக்தி வருமாம்...' உடனே, அதை கழட்டி கொடுத்து பறந்தது ஆமை.அந்த ஓட்டில், பவளமும், விலை உயர்ந்த முத்துக்களும் இருந்தன. அதை பத்திரப்படுத்தி புறப்பட்டான்.மந்திரவாதியிடம், 'மந்திரக்கோலை கை விட்டால் முக்தி கிடைக்குமாம்...' என்றான். அதன்படி, முக்தி அடைந்தார் மந்திரவாதி. செல்வந்தரிடம், 'மனதிற்கு பிடித்தவனை உங்கள் மகள் பார்க்கும் அன்று பேசுவாள்...' என்றான். அப்போது, மாடியில் இருந்து இறங்கிய செல்வந்தரின் மகள், 'அப்பா... இவர் தானே, அன்று இரவு தங்கியது...' என கேட்டாள்.மகிழ்ந்த செல்வந்தர், வரம் வாங்கி வந்தவனுக்கு மகளை மண முடித்தார். செல்வங்களே... பிறர் நலன் பேண முழுமனதுடன் வேண்டினால், துயரங்கள் மறையும்.●●●
ஜோ.ஜெயக்குமார்

Share
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement