பிரமாண்டமான பிஎம் டபிள்யூ எக்ஸ்3 சொகுசு கார் அறிமுகமாகியுள்ளது. எக்ஸ் டிரைவ் 30 ஐ ஸ்போர்ட் எக்ஸ் பிளஸ், எக்ஸ் டிரைவ் 30 ஐ எம் ஸ்போர்ட் என இரு வேரியன்ட்களில் கிடைக்கும்.
புதிய வடிவில் பம்பர், ஸ்போர்ட்டி தோற்றம், மேம் படுத்தப்பட்ட 12.35 டச் ஸ்கிரீன் உடன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், மேட்ரிக்ஸ் ரக அடாப்டிவ் எல்இடி ஹெட்லைட், ஸ்லிம் குரூஸ் கன்ட்ரோல், எலக்ட்ரிக் பார்க்கிங் பிரேக், கிராஷ் சென்சார் சிறப்பம்சம். இதன் 2.0 லிட்டர், டர்போ பெட்ரோல் இன்ஜின், 252 பிஎச்பி பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும். 0-100 கி.மீ., வேகத்தை 6.6 வினாடிகளில் எட்டும். மணிக்கு அதிகபட்சமாக 235 கி.மீ., வேகத்தில் பறக்கும்.
விலை (எக்ஸ்ஷோரூம்):
எக்ஸ் டிரைவ் 30 ஐ ஸ்போர்ட்
எக்ஸ் பிளஸ்-ரூ. 59.90 லட்சம்
எக்ஸ் டிரைவ் 30 ஐ எம் ஸ்போர்ட் - ரூ. 65.90 லட்சம்
சென்னை டீலர்: BMW KUN Exclusive- 91768 56666
கோவை டீலர்: KUN Motor co pvt ltd- 99411 67711
மலரும்... பிஎம்டபிள்யூ.,
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!