மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, செயற்கை சுவாசம் - ஆக்சிஜன் தேவைப்படும் கொரோனா நோயாளிகளில், 96 சதவீதத்தினர், இரண்டு டோஸ் தடுப்பூசியும் போட்டுக் கொள்ளாதவர்கள்; 5 சதவீதத்தினர் மட்டுமே தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள்.
'ஒமைக்ரான்' வைரசின் வீரியம் குறைவாகவே இருந்தாலும், தடுப்பூசி போடாதவர்களுக்கு அவசர சிகிச்சை தேவைப்படுகிறது. தடுப்பூசி போடாத, 50 வயதிற்கு மேற்பட்டவர்கள், ஆக்சிஜன் தவிர, வேறு சில உயிர் காக்கும் கருவிகள் உதவியுடன் சிகிச்சை பெறுகின்றனர்.
ஒமைக்ரான் தொற்று, சுவாச பாதையின் மேல் பகுதியை பாதிப்பதால், ஆக்சிஜன் தேவைப்படாது. ஒமைக்ரான், டெல்டா இரண்டும் சேர்ந்து ஒரே நபரை தாக்கினால் செயற்கை சுவாசம் தேவை. தொற்று பரவல் அதிகமான பின், பலரும் தடுப்பூசி போட அவசரம் காட்டுகின்றனர்.
தடுப்பூசி போட்ட மூன்று வாரங்களுக்கு பின், எதிர்ப்பணுக்கள் முழுமையாக உருவாகும். துவக்கத்திலேயே தடுப்பூசி போட்டிருந்தால் பிரச்னையே இருக்காது.
- பிருஹன் மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன்
தடுப்பூசி போடுவதில் காட்டும் அவசரம்!
ADVERTISEMENT
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!