dinamalar telegram
Advertisement

ஒரு தமிழச்சி சிந்திக்கிறாள்!

Share

* தடுப்பூசி திட்டமா... முதல்வர் துவக்கி வைக்கணும்; பாலம் திறக்கணுமா... முதல்வர் வரணும்; 'பொங்கல் பரிசு தொகுப்பு' தரணுமா... முதல்வர்தான் முதல் பையை எடுத்து தரணும்; ஏன்... அந்தந்த துறை அமைச்சர்கள் இதை செஞ்சா என்ன; பதவியை மட்டும் கொடுத்துட்டு பொறுப்பை எடுத்துக்குற இந்த மரபுக்கு விடியலே கிடையாதா!

* எல்லா அமைச்சர்களும் துறை சார்ந்த இடங்கள்ல ஆய்வு பண்றப்போ, அமைச்சர் செந்தில் பாலாஜி 'டாஸ்மாக்' கடைகளை ஆய்வு பண்ணினதாகவோ, குடிமகன்களோட குறைகளை கேட்டு மனு வாங்கினதாகவோ செய்தி இல்லையே; ஆண்டுக்கு 36 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் தர்ற இடம் அமைச்சர் தீண்டத்தகாததா!

* '12 ஆண்டு கால பள்ளிக்கல்வியால் எந்த பயனும் இல்லை எனும் நிலையை 'நீட்' தேர்வு உருவாக்குகிறது'ன்னு முதல்வர் வருந்துறார். தமிழகத்துல பள்ளிக்கல்வியையும், கல்லுாரி கல்வியையும் திறம்பட முடிக்கிற மாணவர்கள் வேலைவாய்ப்பில்லாம சுத்துறாங்களே... இந்த கல்விக்கு என்ன பயன்!

* 'உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர்கள், மேயர், துணை மேயர் பதவிகளுக்கான வேட்பாளர்கள் தேர்வின்போது கட்சிக்காக நீண்ட காலம் உழைத்தவர்களை தேர்வு செய்ய வேண்டும்'னு மாவட்ட செயலர்கள் கூட்டத்துல தி.மு.க., தலைவர் சொன்னப்போ, என் மனசெல்லாம் உதயநிதி ஸ்டாலினோட மலர்ந்த முகம்; வாழ்க திராவிடம்!
ஜெய்ஹிந்த்!

Share
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement