'தினமலர்' நாளிதழுக்கு...
'நான் குருவம்மா செல்வராஜ். வலது கை, கால் முடங்கி பேச்சு வராம கிடக்குற என் கணவருக்கு மாற்றுத்திறனாளி சான்றிதழும், உதவித்தொகையும் கேட்டு, 16.01.2022 'கண்ணம்மா - ரவுத்திர வீணை' பகுதி மூலமா முதல்வருக்கு கடிதம் எழுதியிருந்தேன்.
'என் செய்தி பிரசுரமான அன்றே... குருவம்மாளின் துயரநிலையை கண்ட திருவள்ளூர் ஆட்சியர் உத்தரவிட, வீடு தேடி ஆம்புலன்ஸ் வர, மறுநாள் 17ம் தேதி நண்பகல் 12:00 மணிக்கு ஆவடி மருத்துவமனையில் செல்வராஜுக்கு மருத்துவ பரிசோதனை நடந்து, அடுத்த ஒரு மணி நேரத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் முன்னிலையில், 'மாற்றுத்திறனாளி சான்றிதழ்' வழங்கப்பட்டிருக்கிறது; கூடவே, சக்கர நாற்காலியும்!
'கூடிய சீக்கிரமே உதவித்தொகையும் கிடைக்க ஏற்பாடு பண்றதா அரசு தரப்புல உத்தரவாதம் தந்திருக்காங்க! ரொம்ப காலம் கழிச்சு என் கணவர் முகத்துல இப்பதான் சின்னதா ஒரு சந்தோஷத்தை பார்க்குறேன். என் வீட்டுக்காரரால பேச முடியாது. அவர் சார்பா நானே மறுபடியும் சொல்றேன்; 'தினமலர்' நாளிதழுக்கு ரொம்ப நன்றிங்க!' கண்ணீர் துடைத்துக் கொண்டார் குருவம்மாள் செல்வராஜ்.
நன்றி!
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!