பெட்ரோ கெமிக்கல் துறையின் பொறியாளர் வேலையை உதறித்தள்ளிய சீ.விஜயலட்சுமி, நான்கு ஆண்டுகளுக்கு முன் கோவை, கணபதியில் 'சணலகம்' திறந்தார். தற்போது சணல் பொருட்கள் தயாரிப்பு, விற்பனை, ஏற்றுமதியில் சாதித்து வருகிறார்.
தனித்துவம்
சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத முதல்தர சணல், உறுதியான தையல், நேர்த்தியான வடிவமைப்பு... இதெல்லாம்தான் சணலகத்தோட தனித்துவம். குஷன் கவர், திரைச்சீலைன்னு 10 வகையான வீட்டு உபயோக சணல் பொருட்கள் தயாரிக்கிறேன்.
அழைப்பிதழ்களுக்கான சணல் உறைகள், சணல்பை, தாம்பூல அன்பளிப்பு பை... எங்களோட அடையாளம்! இதோட பென்சில் பவுச், கார்ப்பரேட் பைல் போல்டர்னு ஸ்டேஷனரி பொருட்களும், 10க்கும் மேற்பட்ட கவர்ச்சிகர பைகளும் தயார் பண்றோம். உலகம் முழுமைக்குமான வியாபாரத்துக்கு சமூக வலைதளங்கள் உதவுது!
'சணல் பொருட்கள் அங்காடி, மூலப்பொருட்கள் விற்பனை, சான்றிதழுடன் சணல் பயிற்சி, ஏராளமான பெண்கள் பணிபுரியும் தயாரிப்பு கூடம்னு 5,000 சதுர அடியில சணலகம் உருவாக்கணும்'ங்கிறது என் பெரும் கனவு.
சிறப்பு பொருள்
14 அங்குல உயரம், 16 அங்குல அகலம் கொண்ட சணல் லேப்டாப் பை - ரூ.250 முதல்
95005 32504
வானமே எல்லை!
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!