அசத்தலான ஆடி கியூ7 எஸ்யுவி., மீண்டும் அவதாரம் எடுக்கிறது. மாசு உமிழ்வு விதி காரணமாக 2020, ஏப்ரலில் விற்பனை நிறுத்தப்பட்டது. இரண்டு ஆண்டுக்கு பின் பிஎஸ்-6 தர இன்ஜினுடன் விரைவில் அறிமுகமாக உள்ளது. பிரிமியம் பிளஸ், டெக்னாலஜி என இரு வேரியன்ட்களில் கிடைக்கும். ரூ.5 லட்சம் செலுத்தி முன்பதிவு செய்யலாம்.
புதிய வடிவில் கேபின், 360 டிகிரி கேமரா, 19 இன்ச் அலாய் வீல், 8 ஏர்பேக்குகள், பனோரமிக் சன்ரூப், மேட்ரிக்ஸ் எல்இடி ஹெட்லைட்ஸ், ஆம்பியன்ட் லைட்டிங், 7 சீட்டர், எல்இடி டெயில்லேம்ப், ஆட்டோமேட்டிக் பார்க்கிங், நான்கு ஜோன் கிளைமேட் கன்ட்ரோல், பாங்க் அண்ட் ஒலுாப்சன் 3டி சவுண்ட் சிஸ்டம், 10.1 இன்ச் டச் ஸ்கிரீன் உடன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், அடாப்டிவ் ஏர் சஸ்பென்ஷன், ஆடி விர்ச்சுவல் காக்பிட், லேன் டிபார்ச்சர் வார்னிங், ஏர் அயானைசர், குவாட்ரோ ஆல்வீல் டிரைவ் சிறப்பம்சம். இதன் சக்தியவாய்ந்த 3.0 லிட்டர் வி6 டர்போ பெட்ரோல் என்ஜின் 340 பிஎச்பி பவரையும், 500 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 8 ஸ்பீடு ஆட்டேமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும். 0-100 கி.மீ., வேகத்தை 5.9 வினாடியில் எட்டும். மணிக்கு அதிகபட்சமாக 250 கி.மீ., வேகத்தில் பறக்கும்.
எதிர்பார்க்கும் விலை : ரூ. 80 லட்சம் -1.20 கோடி (எக்ஸ்ஷோரூம்)
சென்னை டீலர்: Audi Chennai - 76369 20000
கோவை டீலர்: AUDI Coimbatore 73737 34615
சிறப்பா... ஆடி
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!