Load Image
dinamalar telegram
Advertisement

டிசம்பர்

தமிழகம்
டிச. 3: அரசு பணிக்கான போட்டி தேர்வில் தமிழ் தகுதித் தாளில் தேர்ச்சி கட்டாயம் என அரசாணை வெளியீடு.
இரட்டை தலைமை: டிச. 6: அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளராக பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக பழனிசாமி மீண்டும் தேர்வு.
டிச. 10: சென்னை போயஸ் கார்டனில் ஜெயலலிதா வசித்த வேதா இல்ல சாவி, அவரது வாரிசுகளான தீபா, தீபக்கிடம் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி ஒப்படைப்பு.
டிச. 14: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேடு வழக்கை சிபிஐக்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.

டிச. 15: நைஜீரியாவில் இருந்து சென்னை வந்த ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு.
டிச. 15: குன்னுார் ஹெலிகாப்டர் விபத்தில் தீக்காயமடைந்த குரூப் கேப்டன் வருண் சிங் 39, பெங்களூரு ராணுவ மருத்துவமனையில் உயிரிழந்தார்.
டிச. 17: தமிழ்த்தாய் வாழ்த்து பாடலின் போது எழுந்து நிற்பது கட்டாயம் என அரசாணை.
டிச. 17: திருநெல்வேலியில் சாப்டர் சி.எஸ்.ஐ., பள்ளி கழிப்பறை சுவர் இடிந்து விழுந்ததில் மூன்று மாணவர் உயிரிழப்பு.
டிச. 18: விபத்தில் காயம் அடைந்தவருக்கு முதல் 48 மணி நேர இலவச சிகிச்சை அளிக்கும் 'இன்னுயிர் காப்போம்' மருத்துவ திட்டத்தை தமிழக அரசு துவங்கியது.
டிச. 19: இலங்கை கடற் படையால் தமிழக மீனவர்கள் 55 பேர் சிறைபிடிப்பு.
டிச. 21: முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டத்தில் சேர ஆண்டு வருமான வரம்பு ரூ.1.20 லட்சமாக உயர்வு.
டிச. 23: மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு இயக்கம் துவக்கம்.

இந்தியா
டிச. 2: பெங்களூருவில் இருவருக்கு 'ஒமைக்ரான்' வகை கொரோனா பாதிப்பு.
இரட்டை பதவி: டிச. 3: பன்னாட்டு நிதியத்தின் (IMF) தலைமை பொருளாதார நிபுணரான கீதா கோபிநாத், அதன் துணை நிர்வாக இயக்குனராகவும் நியமனம்.
தப்ப முடியாது: டிச. 5: உள்நாட்டில் தயாரான முதல் கண்காணிப்பு கப்பல் 'சந்தாயக்' இந்திய கடற்படையில் சேர்ப்பு. பிற கப்பல்கள் செல்லும் வழித்தடத்தின் ஆழத்தை அளவிடும்.
டிச. 5: நாகலாந்தில் பயங்கரவாதி என சந்தேகித்து அசாம் ரைபிள் படையினர் சுட்டதில் சுரங்க தொழிலாளர், கிராம மக்கள் 13 பேர் பலி. விசாரணைக்கு உத்தரவு.
டிச. 6: டில்லியில் பிரதமர் மோடி - ரஷ்ய அதிபர் புடின் சந்திப்பு.
டிச. 7: கோவா முன்னாள் முதல்வர் ரவி நாயக்(காங்.,), பா.ஜ., வில் சேர்ந்தார்.
டிச. 8: 'போர்ப்ஸ்' பத்திரிகையின் உலகின் சக்தி வாய்ந்த 100 பெண்கள் பட்டியலில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு 37வது இடம். அமெரிக்க நாவலாசிரியர் மெக்கென்சி ஸ்காட் முதலிடம்.
விவசாயி மகிழ்ச்சி: டிச. 9: மூன்று வேளாண் சட்டம் ரத்தானதால், டில்லி எல்லையில் ஓராண்டாக விவசாயிகள் நடத்திய போராட்டம் முடிவுக்கு வந்தது. அவர்கள் சொந்த ஊர் திரும்பினர்.
டிச. 11: ஹெலிகாப்டரில் இருந்து ஏவப்படும் 'சான்ட்' பீரங்கி எதிர்ப்பு ஏவுகணையை இந்திய விமானப்படை சோதித்தது.
டிச. 18: ஒடிசாவின் பாலசோர் கடற்கரையில், அணு ஆயுதம் சுமந்து சென்று 2 ஆயிரம் கி.மீ., தொலைவில் உள்ள இலக்குகளை தாக்கும் அக்னி பிரைம் ஏவுகணை சோதனை.
டிச. 21: வாக்காளர் அடையாள அட்டை-யில் ஆதார் எண் இணைக்கும் தேர்தல் சட்ட சீர்திருத்த மசோதா பார்லிமென்டில் நிறைவேறியது.
டிச. 21: ரஷ்யாவின் 'எஸ்-400' ஏவுகணை தடுப்பு இயந்திரம் பாக்., - இந்தியாவின் பஞ்சாப் எல்லையில் நிறுவப்பட்டது. 400 கி.மீ., துாரம் வரை எதிரி ஏவுகணை, விமானத்தை வழிமறித்து அழிக்கும்.

உலகம்
டிச. 1: 'டுவிட்டர்' தலைமை செயல் அதிகாரியாக இந்தியரான பராக் அகர்வால் நியமனம்.
டிச. 5: இந்தோனேஷியாவில் உள்ள 'செமேரு' எரிமலை வெடித்ததில் 13 பேர் பலி.
டிச. 8: ஜெர்மனி பிரதமராக ஓலப் ஸ்கோல்ஸ் 63, தேர்வு.
டிச. 10: மெக்சிகோவில் அகதிகளை ஏற்றி வந்த லாரி விபத்துக்குள்ளானதில் 53 பேர் பலி.
டிச. 10: பிரிட்டனில் சிறந்த கட்டட வடிவமைப்பாளராக இந்தியாவின் பாலகிருஷ்ண தோஷி தேர்வு.
டிச. 11: அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை அலுவலக இயக்குனராக, இந்தியாவில் பிறந்த கவுதம் ராகவன் நியமனம்.
டிச. 13: 'டைம்' இதழின் சிறந்த நபராக (2021) அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் தேர்வு.
காளி வழிபாடு: டிச. 17: வங்கதேசத்தின் தாகாவில் 1971 போரில் பாக்., ராணுவம் தகர்த்த காளி கோயில் புனரமைக்கப்பட்டது. இதனை இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார்.
டிச. 18: சீனாவின் வயதான பெண் அலிமிஹான் செயிட்டி 135, காலமானார்.
டிச. 15: லண்டனின் யுகோவ் இணையதள ஆய்வு நிறுவனம் வெளியிட்ட உலகின் போற்றுதலுக்கு உரியோர் பட்டியலில்(2021) பிரதமர் மோடிக்கு 8வது இடம். அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவுக்கு முதலிடம்.
டிச. 17 : மியான்மரின் 'நகடக் பெல் ஜி கோர்லோ' விருதுக்கு பிரதமர் மோடி தேர்வு.
டிச. 17: அமெரிக்காவின் போர்ட்டோரிகோவில் நடந்த மிஸ் வேர்ல்டு' அழகி போட்டியில் பங்கேற்ற இந்தியாவின் மனாசா உட்பட 17 பேருக்கு கொரோனா பாதிப்பு. பைனல் 90 நாளுக்கு தள்ளிவைப்பு.

உயரும் கொரோனா

2020 டிச. 31
தமிழக பாதிப்பு - 8.18 லட்சம் - பலி - 12,122
இந்தியா பாதிப்பு - 1.02 கோடி - பலி 1.48 லட்சம்

2021 டிச. 30
தமிழக பாதிப்பு - 27.46 லட்சம் - பலி - 36,765
இந்தியா பாதிப்பு - 3.48 கோடி - பலி - 4.81 லட்சம்

டாப் - 4
டிச. 12: நியூயார்க் உட்பட 5 மாகாணத்தில் புயலால் 110 பேர் பலி.
டிச. 13: உலகில் 100% டிஜிட்டல் மயமான முதல் அரசானது துபாய்.
டிச. 15: ஐ.நா., உலக பாரம்பரிய நிகழ்ச்சி பட்டியலில் கோல்கட்டா துர்கா பூஜை சேர்ப்பு.
டிச. 23: தமிழகத்தில் மீண்டும் பிளாஸ்டிக்கிற்கு எதிரான மஞ்சப்பை விழிப்புணர்வு இயக்கம் துவக்கம்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement