'நோக்கியா'விலிருந்து 36 மணி நேரம் வரை சார்ஜ் தாக்குப் பிடிக்கும் வகையில் , 'இயர்பட்ஸ்' ஒன்றும், 'ஒயர்டு இயர்பட்ஸ்' ஒன்றும் அறிமுகம் ஆகியுள்ளது. 'நோக்கியா லைட் இயர்பட்ஸ் பி.எச்., 205' எனும் இயர்பட்ஸ், 36 மணி நேரம் வரை சார்ஜ் தாக்குப்பிடிக்கும். 6 மி.மீ., டிரைவர்கள் கொண்டிருக்கும் இந்த இயர்பட்ஸில், வாய்ஸ் அசிஸ்டென்ட்ஸ் சப்போர்ட் வசதியும் உள்ளது.
ஒரு குறை எதுவென்றால், இதில் புற சப்தங்களை கட்டுப்படுத்தும் 'ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலிங்' வசதி கிடையாது என்பது தான். 'நோக்கியா ஒயர்டு பட்ஸ் டபுள்யு.பி., 101' எனும் ஒயர்டு இயர்பட்ஸ், 10 மி.மீ., டிரைவர்கள் கொண்டது. இதிலும் வாய்ஸ் அசிஸ்டென்ட் சப்போர்ட் வசதி இருக்கிறது.
விலை:
நோக்கியா லைட் இயர்பட்ஸ் பி.எச்., 205 : 2,799 ரூபாய்
நோக்கியா ஒயர்டு பட்ஸ் டபுள்யு.பி., 101 : 299 ரூபாய்.
'நோக்கியா'வின் இரு இயர்பட்ஸ்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!