Load Image
dinamalar telegram
Advertisement

ஒரு தமிழச்சி சிந்திக்கிறாள்!

* பாலியல் புகார் தர பள்ளிகளோட புகார் பலகையில 14417, 1098 எண்களும், பள்ளிக்கு அருகாமையிலுள்ள காவல் நிலைய தொலைபேசி எண்ணும் இடம்பெறணும்னு அமைச்சர் மகேஷ் உத்தரவு; 'பளிச்'னு சொல்லுங்க அமைச்சரே... வேலிகிட்டே இருந்து பயிரை காப்பாத்துற இத்திட்டம் அரசு சாதனை பட்டியல்ல இடம்பெறுமா?

* 'வெவ்வேறு பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களை 'நீட்' தேர்வு எழுத வைப்பது அநீதி என்றால், வெவ்வேறு பாடத்திட்டங்களில் பயின்ற மாணவர்களுக்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ படிப்பிற்கான இடம் தரச் சொல்லும் ஏ.கே.ராஜன் கமிட்டி அறிக்கை நீதியா'ன்னு கல்வியாளர்கள் கேட்குறதுக்கு ஏன் பதில் வரலை!

* 'மனிதர்கள் அனைவரும் சமம்' எனும் ஐ.நா., முழக்கத்தைதான் 'சுயமரியாதை' எனும் பெயரில் தமிழ் மண் வளர்த்திருக்கிறது' - முதல்வர். ஏன் சார்... அரசு மருத்துவமனையில மார்க்சிஸ்ட் தலைவர் என்.சங்கரய்யாவுக்கு நீங்க ஏற்பாடு பண்ணியிருக்கிற சிறப்பு மருத்துவக் குழு கவனிப்பு சாமானிய முதியவர்களுக்கு சாத்தியமா!

* தமிழக ஊரக வளர்ச்சித்துறை 'முன்மாதிரி கிராம விருது' தரப்போறதுல மகிழ்ச்சி! ஆனா, விருதுக்கான தகுதிகளா திடக்கழிவு மேலாண்மை, பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை, வீட்டு கழிவுநீர் மேலாண்மை உள்ளிட்ட 8 அம்சங்களை சொல்ற அரசு, 'மது பழக்கம் இல்லாமை'ங்கிற தவிர்க்கக்கூடாத சிறப்புத் தகுதியை தவிர்த்தது ஏன்!

என்ன... பதில் இருக்கா?

Telegram Banner
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement