Load Image
Advertisement

'மிரட்டல்' ஜல்லிக்கட்டு

ஒளிரும் விண்மீன் விழிப்பார்வை, அலைபாயும் மயில்தோகை கூந்தல், வில்லாய் வளைந்த புருவம், படபடக்கும் கருவிழி இமைகள், ஆரஞ்சு துண்டுகளை அடுக்கிய உதடு என மொத்தத்தில் வசீகரிக்கும் வண்ணமயில், 'டப்ஸ் மாஷ்' மூலம் சினிமாவிற்குள் 'என்ட்ரி' கொடுத்த இளம்புயல் மிருணாளினி அளித்த பேட்டி:

* பிறந்து வளர்ந்தது...
பிறந்தது புதுச்சேரி. வளர்ந்தது, படித்தது எல்லாம் பெங்களூரு. இன்ஜினியரிங் முடிச்சிட்டு ஐ.டி., கம்பெனியில் வேலை பார்த்தேன்.

* நடித்த படங்கள்
தமிழில் சாம்பியன், சூப்பர் டீலக்ஸ். கொரோனா அசாதாரண சூழலுக்கு பின் 2021ல் தீபாவளிக்கு எனிமி, எம்.ஜி.ஆர்., மகன், அப்புறம் ஜாங்கோ என ஒரே மாதத்தில் 'ஹாட்ரிக்' படங்கள் வெளியானது. தெலுங்கு படங்களிலும் நடிச்சிருக்கேன். தற்போது 'கோப்ரா' படத்தில் நடிச்சிட்டு இருக்கேன்.

* ஹிட்டடித்த 'டம் டம்' பாடல்
'எனிமி' படத்தில் இடம்பெற்ற 'மாலை டம் டம்... மஞ்சர டம் டம்' பாடலை 8 மில்லியனுக்கும் மேற்பட்டோர் பார்த்து ரசித்துள்ளனர். ரொம்ப சந்தோஷமா இருக்கு. இந்த பாட்டுக்கு டான்ஸ் ஆடுவதற்கு அரை நாள் மட்டுமே பயிற்சி எடுத்தேன். 'ஹிட்' கொடுத்த மக்களுக்கு நன்றி. சமீபத்தில் வெளியான 'போதை தேவதை' மியூசிக் வீடியோவை 2 மில்லியனுக்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். 80 களின் காதல் மன்னர்களுக்கு இந்த பாட்டு சமர்ப்பணம்.

* அழகின் ரகசியம்
அப்படியெல்லாம் ஒரு ரகசியமும் இல்லை. இங்கே எல்லோருமே அழகு தான். பெண்களுக்கு புடவை, தாவணிதான் அழகு. எனக்கு அதுதான் பிடிக்கும்.

* பொங்கல் கொண்டாட்டம்
போகியில் துவங்கி தை, மாட்டு பொங்கல்னு ஒரே கும்மாளம் தான். 'பொங்கலோ பொங்கல்' என்று குரல் எழுப்பி பக்கத்து வீட்டுக்காரர்களை அலற விடுவதுண்டு. அப்படியே தலைவாழை இலையில் சமைத்தவற்றை பிசைந்து போட்டு 'புல்' கட்டு கட்ட வேண்டும்.
பெரியவங்க காலில் விழுந்து ஆசிர்வாதத்தோடு, 'பொங்கல் காசு'ம் வாங்க வேண்டும். பாரம்பரிய விளையாட்டான தாயம், பல்லாங்குழி விளையாடுவது வழக்கம். அந்த விளையாட்டில் நான் தான் சாம்பியன்.

* ஜல்லிக்கட்டு பார்த்ததுண்டா
வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு பிடிக்கும். ஒரு முறை கூட நேரில் பார்த்தது இல்லை. ஏன்னா... கொஞ்சம் பயம்தான். வேற ஒன்னுமில்லே. 'மிரட்டல்' ஜல்லிக்கட்டை நேரில் பார்க்க ஆசையா இருக்கு.

* 2022 எப்படி இருக்கணும்
பெரிய எதிர்பார்ப்பு ஒன்னுமில்லை. 'ஒமைக்ரான், டெல்டாக்ரான்'னு புதுசு புதுசா பீதிய கிளப்புறாங்க. கடந்த ஆண்டுகளைப் போல் இல்லாமல், கொரோனாவால் எந்த தொழிலும் பாதிக்க கூடாது. கொரோனா சீக்கிரமே நம்மளை விட்டு போகணும். எல்லா மக்களும் சந்தோஷமா இருக்கணும்.

நல்லசிவன்வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

ஸ்ரீபெரும்புதூரில் சொந்த மனை வாங்க சரியான நேரம் வந்தாச்சு!

Advertisement
 
Advertisement