Load Image
dinamalar telegram
Advertisement

அதுல்யாவின் அனுபவம்

அழகு, கவர்ச்சி, ஹோம்லி, ஹாட் என சம கலவையில் 'செஞ்சு வச்ச செப்புச் சிலை போல்' அழகியலுக்கான அனைத்து அம்சங்களுடன் ஜொலிக்கிறார் நடிகை அதுல்யா. 'மார்டன் அவுட்பிட்'டில் வெளியாகும் இவரின் புகைப்படங்கள் மூச்சுமுட்ட வைக்கின்றன. முதலிரவை மையமாக வைத்து வெளியான 'முருங்கைக்காய் சிப்ஸ்' படம் மூலம் இளம் ரசிகர்களின் மனங்களை சுண்டியிழுத்துள்ள அவர் நம்மிடம் பேசியதில் இருந்து…

சினிமா பயணம் 'பிரைட்டா' இருக்கா

'காதல் கண் கட்டுதே' மூலம் சினிமா அறிமுகம் கிடைச்சு 'நாடோடி 2', 'அடுத்த சாட்டை', 'கேப்மாரி', 'ஏமாளி' என அடுத்தடுத்து கிடைக்கும் வாய்ப்புகளால் இப்ப வரை சினிமா பயணம் நல்லாத்தான் போயிட்டு இருக்கு.

'முருங்கைக்காய் சிப்ஸ்' தந்த அனுபவம்
பெயரே படத்திற்கு 'பிளஸ்' ஆக அமைந்து விட்டது. நல்ல கதை தான். நடிகைகளுக்கு ஒவ்வொரு படமும் ஒரு அனுபவத்தை தரும். அந்த வகையில் இந்த படத்தில் நடிக்க நல்ல வாய்ப்பு கிடைச்சது.

படத்தில் இரட்டை அர்த்த வசனங்கள் அள்ளித் தெளிக்கப்பட்டுள்ளதே
அது இயக்குனர் முடிவு. படம் பார்த்தால் அனைத்து சீன்களும் ரசிக்கும் படியாக இருக்கும்.

நீங்க 'முருங்கைக்காய் சிப்ஸ்' ருசிச்சு இருங்கீங்களா
'முருங்கைக்காய் சிப்ஸ்' சாப்பிட்டதில்லை. ஆனால் முருங்கைக்காய் சாம்பார் 'செம'யாக இருக்கும்.

கைவசம் அதிக படங்கள் இருக்காமே
கண்ணு வச்சிராதீங்க. உண்மை தான்.
இப்போதைக்கு 'எண்ணித்துணிக' 'கடாவர்' 'வட்டம்' படங்களை முடிச்சு ரிலீஸூக்காக காத்திருக்கிறேன். ஹரிஷ் கல்யாணுடன் பெயரிடாத படம் ஒன்று உள்ளிட்ட படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளது.

'கிளாமர்' அவசியமா
இயக்குனர்கள் பார்வையை பொறுத்தது. பொதுவாக 'கிளாமர்' என்பதை நடிப்பாக பார்த்தால் அது பெரிய விஷயமே இல்லை. ஆனால் இங்கு அப்படி பார்க்கப்படுவதில்லை. அதுதான் பிரச்னையே. இந்த நிலை மாற வேண்டும்.

நடிகைகளுக்கான சவால்
நமக்கு அமையும் படங்கள் தான். கதை, மனதுக்கு பிடிச்ச 'ரோல்' என ஒவ்வொரு படம் முடிந்தும் அதற்கு கிடைக்கும் 'ரிசல்ட்' வரை எல்லாம் சவால் தான்.

கனவு கேரக்டர்?
எந்த ரோல் கிடைச்சாலும் ரசிகர்கள் மனதை கவரும் வகையில் நடிக்க வேண்டும். 10 ஆண்டுகளுக்கு பின்னரும் நாம் நடிச்ச கேரக்டர் பெயர் சொல்ல வேண்டும்.

கல்லுாரி காலங்களில் காதல்
பெரிசா ஒன்னும் இல்லை. என்னை அக்கா என கூப்பிட்ட ஜூனியர் பையன் எனக்கு 'புரபோஸ்' செய்ததை மறக்க முடியாது.

ரசிகர்கள் பற்றி
நடிகர்களுக்கு கிடைக்கும் பெரிய 'கிப்ட்' ரசிகர்கள் தான். அவர்களுக்கு பிடித்திருந்தால் போதும் முகம் தெரியாதவர்களும் நம் முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவர். ரசிகர்கள் தான் நடிகைகளின் கெத்து.

தை பொங்கல் கொண்டாட்டம்
பொங்கல், தீபாவளியை குடும்பத்துடன் கொண்டாடுவதை வழக்கமாக வைத்துள்ளேன். நாங்கள் விவசாய குடும்பம் என்பதால் பொங்கல் கொண்டாட்டம் அதிகமா இருக்கும். மாட்டு கொம்புக்கு பெயின்ட் அடிச்சு, பொட்டு வச்சு அழகு பார்த்தது மறக்க முடியாது.

இந்தாண்டு திட்டம்
எப்போதும் போல் கோவை அருகே அட்டுக்கல் மலைவாழ் பகுதியில் உள்ள எங்கள் தோட்டத்தில் ஜாலியா நடத்த பிளான் செய்துள்ளோம்.

ஜல்லிக்கட்டு
தமிழர்கள் வீரத்தை பறைசாற்றும் விளையாட்டு. தமிழர்களின் கவுரவம் அது. வீரர்களுக்கும், ரசிகர்களுக்கு என் தைத் திருநாள் வாழ்த்துகள்.

காளீஸ்வரன்

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement