Load Image
dinamalar telegram
Advertisement

உங்க வீட்டுல எப்படி?

அதிகாலை
'அதெப்படி டாக்டர்... 'போக்சோ பாயும்'னு தெரிஞ்சும் பள்ளிகள்ல மாணவியருக்குபாலியல் தொந்தரவுகள் தொடருது; அப்போ தப்பு பண்ற அயோக்கியனுக்கு அரசு மேல பயம் இல்லை; அரசு என்னை எதுவும் செய்யாதுங்கிற தைரியம்!'
இடம்: 'மனநல மருத்துவர்' கிளினிக்
'ஹலோ... எதுக்கு இப்படி உணர்ச்சி வசப் படுறீங்க; இந்த கோபத்தால என்ன ஆகப்போகுது!'
'ஒண்ணும் இல்லை டாக்டர்; பள்ளி வளாகத்துல நடக்குற இந்த கொடுமைக்கு காரணமானவனை சக ஆசிரியர்கள் காட்டிக் கொடுக்காத வரைக்கும் 'அவனை உடனே பணிநீக்கம் செய்யணும்'னு அவங்க போராடாத வரைக்கும் எதுவும் ஆகப் போறதில்லை!'

'அதான் சொல்றேன்... கடந்து வர்ற செய்திகளை மறக்கப் பழகுங்க; இல்லேன்னா... ஓ.சி.டி., பிரச்னையில இருந்து மீள முடியாது; 'பழையன கழிதலும் புதியன புகுதலும்தான் வாழ்க்கை'ன்னு இன்னும் நீங்க புரிஞ்சுக்கலையா?'
'டாக்டர்... அது எப்படி வாழ்க்கையாகும்; பழையன கழிதலும் புதியன புகுதலும் வாழ்க்கையோட ஒரு நிகழ்வு... போகி; 'குடிசை மாற்று வாரியம்' பெயரை 'நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்'னு மாத்திட்டா வீடுகள் இடிஞ்சு விழாதா?'
'போதும்... போதும்... உங்க மனசுல உடனடியா ஒரு 'போகி' கொண்டாடி ஆகணும்!'
'அய்யோ டாக்டர்... நான் சொல்ல வர்றதையே...'
டிங்டிங்டிங்... டிங்டிங்டிங்டிங்... டிங்டிங்டிங்...அலாரம் அலற... கனவு கலைய... மருத்துவரிடம் இருந்து நான் விடைபெற...
'ஹேப்பி பொங்கல்ப்பா'
மகனின் வாழ்த்து மங்கலான அவன் முகத்துடன் தெரிய படுக்கையில் இருந்து நான் WAKE UP.

காலை
'நேத்து ஒரு செய்தி வாசிச்சேன்; இந்திரா பானர்ஜி, பெலா திரிவேதி, ஹிமா கோலி, நாக ரத்னான்னு நாலு பெண் நீதிபதிகள் உச்ச நீதிமன்றத்துல இருக்குறாங்களாமே!'
'ம்ம்ம்... கொஞ்சம் சட்னி போடு'
இடம்: உணவு மேஜை
'சர்க்கரை பொங்கல் நல்லாயிருக்கா?'
'ம்ம்ம்... ம்ம்ம்...'
'நந்தாதேவியை 14,500 அடி உயர சிகரம்னு சொல்றாங்க; அங்கே மூணு பெண்கள் பாதுகாப்பு பணியில இருக்குறாங்கன்னு என்னால நம்பவே முடியலைங்க; அதுல... 'ரோஷினி நெகி'ங்கிற பொண்ணுக்கு 25 வயசுதானாம்! எப்படியெல்லாம் இந்த பெண்கள் சாதிக்கிறாங்க இல்ல!'
'ம்ம்ம்... பொங்கல்ல இனிப்பு கம்மியா இருக்கே!'
'அய்யோ... அப்படியா; அவனும், அவளும் ஒண்ணுமே சொல்லலைங்க; இனி பார்த்து பண்றேன்! ஏங்க... நான் ஒண்ணுமே சாதிக்காம வீட்டுலேயே முடங்கிட்டேனா?'
'ச்சே... ச்சே... அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை;
ஏய்... மத்தியானத்துக்கு என்ன சமைக்கப் போறே?'
'யு டியூப் பார்த்து ஏதாவது வித்தியாசமா பண்றேன்!'
மனைவியை கடந்து வரவேற்பறைக்குள் நுழையும் கணத்தில், 'ஏம்ப்பா... அம்மாவை வீட்டுக்குள்ளேயே நீங்க முடக்கிட்டீங்கதானே!' - என் மகள்.
என்னிடம் SILENCE.

மதியம்
'கடந்த காலங்களில் சம்பிரதாயத்துக்காக இருந்த ஹிந்து சமய அறநிலையத் துறையை முதல்வர் ஸ்டாலின் இயங்க வைத்துள்ளார்னு துறை அமைச்சர் சொல்றார்னா யாருப்பா காரணம்; இதுவரை இல்லாத அளவுக்கு இத்தனை வேகமா தமிழக கோயில் சொத்துக்கள் மீட்கப் படுதே... இதுக்கு யார் காரணம்; என் பேரன், பேத்திங்க ஹிந்து பண்டிகைகளை இந்த மண்ணுல கொண்டாடுவாங்கன்னு எனக்கு நம்பிக்கை வந்திருக்கே... காரணம் யாரு; எனக்கு மோடி வேணும்ப்பா... பிரதமரா வேணும்!'
இடம்: பால்கனி
'அதெல்லாம் சரிடா... இந்த 'நீட்' தேர்வு அழுத்தத்தால 19 உயிர்கள் போயிருக்கிறதா தமிழகத்துல சிலர் சொல்றாங்களே...'
'பார்லிமென்ட்டுக்கு வெளியே நின்ன 12 எம்.பி.,க் களுக்கு நீங்க முக்கியத்துவம் கொடுப்பீங்களா; இல்ல... அவைக்குள்ளே மக்கள் பிரச்னைகளுக்காக கடமையாற்றின மக்கள் பிரதிநிதிகளை வணங்குவீங்களா; சொல்லுங்கப்பா...'
'செம இனிப்புடா... நான் இந்த கரும்போட ருசியை
சொல்லலை!'
'அப்பா... I KNOW'

இரவு
'அடி வாங்கினதுக்கப் புறம் 'வலிக்கலையே...'ன்னு சிரிக்கிறது, 'நீ பலவீனமான வன்'னு அடிச்சவனை குழப்புற யுக்தி தானேம்மா?'
இடம்: வரவேற்பறை
அண்ணாத்த வெற்றிக்காக ரஜினி அளித்த தங்க செயின் செய்தியை பார்த்துக் கொண்டிருந்த மகள், அதிலிருந்து கண்ணெடுக்காமல் ஒரு நிமிடம் யோசித்தாள்; என் குரலை மீண்டும் அசை போட்டு, 'ஆமாப்பா...' என்று திரும்பினாள் சிரித்தபடி; உடனடியாய் இருட்டானது அலைபேசி!
'இது 'ஸ்கிரீன் அடிக் ஷன்'டா; எந்தநேரமும் அலைபேசியை பார்த்துட்டே இருக்காதே!'
'உண்மைதான்ப்பா; 'உழைச்சா ஜெயிக்கலாம்'ங்கிற பொய்யை பலபேர் பலவிதமா சொல்லிட்டு இருக்கானுங்க; லட்சக்கணக்குல அதுக்கு வியூஸ் வேற!'
'உழைக்கிறவன் எல்லாம் ஜெயிக்கிறதில்லை'ன்னு எதை வைச்சும்மா சொல்றே?'
'எந்த ஒரு கட்சியோட மாவட்ட செயலரும், அமைச்சரும்.. கட்சியோட தலைமை பதவிக்கோ, ஆட்சியோட தலைமை பதவிக்கோ ஆசைப் படுறதில்லையே; தலைவரோட மகனையோ, மருமகனையோ தானே கை காட்டுறாங்க!'
'ஆச்சரியமா இருக்கும்மா நீ அரசியல் பேசுறது!'
'ச்சே... ச்சே... நான் உண்மை பேசுறேன்; அரசியல்ல ஏதுப்பா உண்மை!'
'AWESOME'

இரவு
'நாம எப்பங்க 3வது தடுப்பூசி போட்டுக்கலாம்?'
'இன்னும் ஊசி போட்டே ஆகணும்னு உனக்குத் தோணுதா?'
'இல்ல... ஊசி போட்டுக்கிட்டா 'கொரோனா' தாக்கினாலும் மரணத்தை ஜெயிச்சுடலாம்னு சொல்றாங்களே...'
இடம்: படுக்கையறை
'சரிம்மா... அடுத்த முகாம்ல கண்டிப்பா ஊசி போட்டு விடுவோம்!'
தமிழகத்துல 'கொரோனா' தடுப்பூசி போட ஆரம்பிச்ச ஜனவரி 16, 2021 வரைக்கும் 'கொரோனா'வால இறந்தவங்க 12 ஆயிரத்து 257 பேர்; ஏப்ரல் 30, 2021ல் 13 ஆயிரத்து 933 பேர்; ஆனா, 18 வயசுக்கு மேற்பட்டவங்களுக்கு தடுப்பூசி திருவிழா ஆரம்பிச்ச மே 2021 - டிசம்பர் 2021 வரைக்கும் 22 ஆயிரத்து 843 பேர். இதுக்கு காரணம் 'டெல்டா' வைரேஸாட வீரியம்னா, 'தடுப்பூசி'க்கு என்ன வீரியம்?'
'ப்ப்ப்ச்ச்ச்... என்கிட்டே பதில் இல்லை!'
'அது ஏங்க தினசரி அரசு வெளியிடுற 'கொரோனா' பாதிப்பு பட்டியல்ல தடுப்பூசி போடாம இறந்தவங்க இத்தனை பேருங்கிற தகவல் இல்லை?'
'இது நல்ல கேள்வி. ஆமா... இவ்வளவு யோசிச்சுமா ஊசி போடணுங்கிறே...?'
'ஆமாங்க... ஊரோட ஒத்துப் போயிருவோம்! தடுப்பூசி போட்டா கொரோனா வந்தாலும் பாதிப்பு கடுமையா இருக்காது.'
'பிரமாதம்! நான் உன்னை வீட்டுக்குள்ளே முடக்கியிருக்க கூடாது. ம்ஹும்... வாய்ப்பு கொடுத்தா
தானே உன்னைப் போன்ற பெண்ணின் தலைமை பண்புகளை தெரிஞ்சுக்க முடியும்!'
'பழையன கழிதல் புதியன புகுதல் 'போகி'க்கு மட்டும் இல்லீங்க...'
'புரியுதும்மா... அது வாழ்க்கைக்கும் சேர்த்துதான்னு புரிய வைச்சுட்டியே; GOOD NIGHT!'

நேரம் கொல்லும் 'டிவி' நிகழ்ச்சிகளுக்கு மத்தியில் எங்கள் வீட்டு பொங்கல் திருநாள் இப்படி கடக்கவும் வாய்ப்புண்டு; உங்க வீட்டுல எப்படி?

வாஞ்சிநாதன்

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement