dinamalar telegram
Advertisement

இளஞ்சோலை பூத்ததோ... தமிழ் சேலை அணிந்ததோ...

Share

மல்லிகை சுமக்கும் கூந்தல்... காந்தமாய் ஈர்க்கும் மைவிழிகள்... பிறை நெற்றியில் நிலா பொட்டு, கால் கொலுசுகள் இசைக்கும் மெட்டு, தமிழ் சேலை அணிந்த மங்கை உன்னை பார்த்ததும் இளஞ்சோலை பூத்ததோ என்று கவிபாட துாண்டும் பாரம்பரிய சேலை கட்டும் முறை குறித்து மனம் திறக்கிறார் மும்பையில் பேஷன் ஸ்டைலிஷ் அண்ட் இமேஜ் டிசைன் படிக்கும் மதுரை நிவேதிதா சந்திரமோகன்...
''சேலை ஒரு உடையல்ல ஒரு துணி. பெண்கள் கீழிருந்து மேலே சுற்றினால் சேலை, கீழே சுற்றினால் வேட்டி. சேலை கட்டும் முறை பெண்கள் செய்யும் வேலை சார்ந்தே இருக்கிறது. விவசாயம், தேயிலை தோட்டத்தில் வேலை செய்யும் பெண்கள் நடக்க வசதியாக கணுக்கால் வரை அணிந்து, தலைக்கும் சுற்றுவர்.
சேலையிலேயே தொட்டில உருவாக்கி குழந்தையை துாங்க வைத்தபடி வேலை செய்வர். சேலை அணியும் முறை கோயில் சிலைகளில் கூட உள்ளன.
வட இந்தியா, குடகு, கோண்டு என பல வகை சேலை கட்டும் முறை இருந்தாலும் நம் தமிழகத்தில் தென்மாவட்டம் உட்பட பல நகரங்களில் நிவி, நிவி பட்டு, கண்டாங்கி டிரேப்பிங் முறை அதிகம் உள்ளது.
இதையே இன்று நவீனமாக கட்டுகிறார்கள். 3000 ஆண்டுகளுக்கு முன்பே சேலை பெருமை பறைசாற்றப் பட்டுள்ளது. இன்றும் கூட டுவீலர்களில் பின்னால் அமரும் பெண்களின் சேலை சக்கரத்தில் சிக்காமல் இருக்க 'சாரீ கார்டு' தடுப்பு வைத்து தயாரிக்கிறார்கள்.

கண்டாங்கி டிரேப்பிங்
தமிழ் கிராம பெண்கள் பின்னால் கொசுவம் வைத்து கட்டும் முறையே கண்டாங்கி. இது வீட்டு, வயல் வேலைகள் செய்ய எளிதாக இருக்கும். பெரும்பாலும் பிளவுஸ் முழங்கை மூட்டு மேலே வரை இருக்கும். இது அழிந்து வரும் முறையாக மாறுகிறது. இதோடு மடிசார், மோகனவல்லி என பல முறைகள் உள்ளன. தைக்காமலே ஒரு துணியை, சேலை என்ற ஆடையாக மாற்றிய பெருமை நமக்கே உரியது.

நிவி சிம்பிள் டிரேப்பிங்
இது பொதுவான டிரேப்பிங், அதாவது கட்டும் முறை. கீழே முன்பக்கம், மேலே அடுக்கு மடிப்பு வைத்து கட்டுவது சிம்பிள் நிவி. மதுரை உட்பட தமிழக பெண்கள் பலர் வீடுகளில் நிவி முறை சேலை கட்டுகிறார்கள். முகம் துடைக்க, சூடான பாத்திரம் துாக்க, முககவசமாக அணிய என முந்தானை பலவகையில் உதவுகிறது.

நிவி பட்டு டிரேப்பிங்
திருமணம் போன்ற விசேஷங்களுக்கு செல்லும் போது பட்டு சேலையை நிவி முறையில் கட்டுவர். கீழே மடிப்பு வைப்பது போல் மேலை அடுக்கு மடிப்பு வைக்காமல் பிளைனாக விடுவர். இதில் முந்தானையை பின்பக்கம் இழுத்து இடுப்பில் சொருகுவதும் இல்லை. பட்டு சேலை அணியும் போது தான் தகதக தங்க நகைகளும் அணிய முடியும்.

த.ஸ்ரீனிவாசன்

Share
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement