Load Image
Advertisement

தமிழ் மக்கள் பாசக்காரங்க! - அனுசித்தாராவின் அன்பு பொங்கல்

கேரளாவின் வயநாடு என்ற வனதேசத்திலிருந்து வந்த வன தேவதையோ என வசீகரிக்கும் அழகு. வஞ்சனையே இல்லாமல் அணு அணுவாய் ரசித்து, பிரம்மன் படைத்த இனிய கவிதையாய் இளமை பொங்க சிரிக்கும் அனுசித்தாராவே, இன்று கேரள இளைஞர்களின் கேள்வியே இல்லாத 'சாய்ஸ்'. தமிழிலும் 'வனம்' மூலம் வந்து ரசிகர்கள் மனதில் வட்டமடிக்க தயாராகி விட்டார். பொங்கல் மலருக்காக அனுசித்தாரா...

* நீங்க நடித்த கதாபாத்திரங்களில் உங்களுக்கு மிகவும் பிடித்தது?

'ராமன்ட ஏதன் தோட்டம்' என்ற படத்தில் மாலினி என்ற கதாபாத்திரம். மக்களிடம் அதிகமா என்ன பேச வைத்தது.

* மம்முட்டி கூட நடிச்சிங்க, அடுத்து மோகன்லாலிடம்..
மம்முட்டி கூட 3 படங்கள் நடிச்சேன். 'டிவெல்த் மேன்' என்ற ஜித்து ஜோசப் படத்தில் மோகன்லால் கூட நடிச்சிருக்கேன். விரைவில் ரிலீஸ் ஆகும்.

* பொங்கல் பண்டிகை எப்படி
பொங்கல் அன்று என் தோழிகள் வீட்டுக்கு போய் நல்லா பொங்கல் சாப்பிட்டு வருவேன்.

* சமீபத்தில் 'வனம்' என்ற படத்தில் நடித்த நீங்கள் இதுவரை தமிழ் படங்களில் ஏன் கவனம் செலுத்தவில்லை?
சில வாய்ப்புகள் வருது, ஆனா எனக்கு பிடித்த மாதிரி இல்ல. நிறைய படங்கள் பண்றதை விட நல்ல கதைகள் உள்ள படமாக பண்ணனும்னு ஆசை. நல்ல கதைகளுக்காக காத்திருக்கிறேன்.

* ஓணம், தீபாவளி, பொங்கல், ரம்ஜான் என எல்லா பண்டிகையும் கொண்டாடுறிங்க போல?
என் குடும்பத்துல பல மொழி, இன மக்கள் இருக்காங்க. பல காதல் இருக்கு. அப்பா முஸ்லிம், அம்மா ஹிந்து. எல்லா பண்டிகையும் கொண்டாடுவோம்.

* உங்களோடு நடிக்க வந்த ஹீரோயின்கள் தமிழில் தனுஷ், சூர்யாவுடன் நடித்துள்ளார்களே. உங்களுக்கு அமையலன்னு வருத்தமா?
அந்த மாதிரி எதும் நினைக்கல. வாய்ப்பு கிடைச்சா சந்தோஷப்படுவேன்.

* மலையாளத்தில் நீங்கள் யாருடைய ரசிகை?
மம்முட்டி. ஹீரோயின்ல ஊர்வசிய பிடிக்கும்

* மலையாள நடிகைகள் தமிழ் படங்களில் ஹிட் கொடுப்பது பற்றி?
தமிழ்நாட்டு மக்கள் கொடுக்கிற லவ் சப்போர்ட் தான் காரணம். நல்ல கதாபாத்திரங்களில் நடிக்கும் போது கேரளாவின் நடிகைகள் அப்படின்னு பிரித்து பார்க்காமல் தமிழ் பொண்ணாகவே பார்க்கிறாங்க. அது தான் பெரிய பலம். தமிழ் மக்கள் பாசக்காரங்க.

* நீங்க என்ன படிச்சிருக்கீங்க?
பிளஸ் 2 படிக்கும் போது முதல் படம். மோகினி ஆட்டம் பத்தி நிறைய படிச்சிருக்கேன். டிகிரி வரை படிச்சிருக்கேன். 8 வருஷமா நடிப்பில் இருக்கேன்.

* பொழுதுபோக்கு...
வீட்டில் நான் தான் சமைப்பேன். லாக் டவுனில் நேரம் இருந்ததால் நிறைய வீடியோ உருவாக்கி யூடியூபில் வெளியிட்டேன். இப்போ எனக்கு ஷூட்டிங் அதிகமா இருக்கு.

* உங்கள் கூந்தலுக்கு நிறைய ரசிகர்கள் இருக்காங்களே? என்ன ரகசியம்?
என் பாட்டி, அம்மா எல்லாருமே தலைக்கென்று ஒரு ஆயில் தயார் பண்ணுவாங்க. அதைத் தான் சின்ன வயசிலிருந்தே பயன்படுத்துகிறேன். என் ஊர் வயநாட்டில் தண்ணீர், காலநிலை நல்லா இருக்கும். அது தான் இயற்கையிலே இன்னும் நம்மை பாதுகாப்பா வச்சிக்க முடியுது.

* சின்ன வயதிலேயே திருமணம் செய்தது உங்களுடைய நடிப்புக்கு பாதிப்பா?
காதல் திருமணம் செய்தேன். அவர் போட்டோகிராபர். கல்யாணம் ஆனது பெரிய பிரச்னை இல்லை. அவரது ஒத்துழைப்பு கிடைத்ததால் தான் இப்போது வரை படம் பண்றேன்.

வீரமும், தீரமும், பாசமும் நிறைந்த தமிழ் மக்களுக்கு என் பொங்கல் வாழ்த்துகள். பாதுகாப்பா கொண்டாடுங்க!

-கவிதாவாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

ஸ்ரீபெரும்புதூரில் சொந்த மனை வாங்க சரியான நேரம் வந்தாச்சு!

Advertisement
 
Advertisement