பெட்ரோல் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. அதனால், பல நாடுகளில் மாற்று எரிபொருள் கண்டுபிடிப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். ஜார்கண்ட் மாநிலம், ராஞ்சியில் பொறியாளரான, விஷால் பிரசாத் குப்தா என்பவர், தண்ணீரில் மிதக்கும் பாசியை பயன்படுத்தி, இயற்கை டீசல் தயாரித்திருக்கிறார்.
இதற்காக, பங்க் ஒன்றை நிறுவி, வாகனங்களுக்கு இயற்கை டீசல் விற்பனை செய்து வருகிறார். வழக்கமான டீசல் விலையை விட, 10 ரூபாய் குறைவாக இருப்பதால், வியாபாரம் அமோகமாக நடக்கிறது.
'இந்த இயற்கை டீசலை நாடு முழுவதும் விற்பனை செய்தால், நன்றாக இருக்கும் என்ற கருத்து வலுப்பெற்று வருகிறது. அதிகளவில் இந்த டீசல் தயாரிக்க முடிந்தால், விலை இன்னும் கணிசமாக குறையும்...' என்கிறார், விஷால்.
அதிக அளவில் நீர்த் தேக்கங்கள், நதிகள், குளங்கள் மற்றும் ஏரிகள் உள்ள கேரளாவில், இயற்கை டீசல் தயாரிக்கலாம் என்பதற்காக, விஷாலை அழைத்து, பேச்சு நடத்தி உள்ளது, கேரள அரசு.
— ஜோல்னாபையன்
இயற்கை டீசல்!
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!