இந்தியாவிலும் மற்ற நாடுகளிலும் நகைக் கடைகள் வைத்துள்ள, போபி செம்மண்ணுர், எப்போதும் தமாஷாக பேசக் கூடியவர். உலக கால்பந்து வீரரான, மரடோனாவின் நண்பர். அவரை, கேரளா அழைத்து வந்து கவுரவித்தார். ஏராளமான விலை உயர்ந்த கார்கள் போபியிடம் உள்ளன.
'என்னை யாரும், சார் என்று அழைக்கக் கூடாது; போபி என்று அழைத்தால் போதும்...
'ஒரு வயதில், என் வாயில் மது சொட்டுகள் விட்டு ருசிக்க வைத்தார், தாத்தா. இன்றும் அளவோடு குடிக்கிறேன்...' என்கிறார்.
தாத்தா மீதுள்ள பாசத்தால், அவரைப் போன்றே உடைகளை மட்டும் அணிந்து வருகிறார். தான் மட்டுமல்ல, மற்றவர்களும், 'ரோல்ஸ் ராய்ஸ்' காரில் பயணிக்க வேண்டும் என்று, தங்க வர்ணம் பூசிய தன், 'ரோல்ஸ் ராய்ஸ்' காரை, டாக்ஸி ஆக விட்டுள்ளார்.
ஒரு பெரும் தொழிலதிபரால் இவ்வளவு எளிமையாக இருக்க முடியுமா?
— ஜோல்னாபையன்
எளிமையான தொழிலதிபர்!
ADVERTISEMENT
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!