பார்வோ வைரஸ் என்பது நாய்கள், பூனைகளை தாக்கும் வைரஸ் தொற்று. இவை லாப்ரடார், ராட்வேயிலர், டாபர்மேன், ஜெர்மன் செப்ஹர்ட், டெர்ரியர் வகைகளை அதிகமாக பாதிக்கும்.
நாட்டு நாய்களில் சற்று குறைவான பாதிப்புகளை ஏற்படுத்தும். இது பாதித்த விலங்குகளிடமிருந்து நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அதன் மலத்தின் மூலம் பரவக்கூடியது. 6 முதல் 20 வார வயதுடைய நாய்களை தாக்கும் போது 16 முதல் 48 சதவீதம் இறப்பு ஏற்படலாம்.
தடுப்பூசி செலுத்தாவிட்டால் வயதான நாய்களும் பாதிக்கப்படும். இது மனிதர்களுக்கு பரவாது. காற்றின் மூலம் பரவாது. பாதிக்கப்பட்ட நாய்களை கையாளும் மனிதர்கள் மூலம் மற்ற நாய்களுக்கு பரவும். நாய்கள் மூலம் பூனைகளுக்கு பரவும் தன்மையுடையது. நோய் பாதித்த நாய் குட்டிகள் முதலில் சோர்வுடன் உணவு உண்ணாமல் காய்ச்சலுடன் இருக்கும். அதிகமான வாந்தி, வயிற்றுப்போக்கு காணப்படும். துர்நாற்றத்துடன் கூடிய ரத்தம் கலந்த வயிற்றுபோக்கு காணப்படும். சிகிச்சை அளிக்காவிட்டால் நீர்ச்சத்து , இதர ஏலேக்ட்ரோல்ய்ட் குறைபாடுகளால் நாய்குட்டிகள் இறக்க நேரிடும்.
தாயிடமிருந்து பிரித்த 6 வாரத்திற்கு மேற்பட்ட குட்டிகளுக்கு முதலாவதாக கெனைன் டிஸ்டெம்பர், ஹெபாடிடிஸ், லெப்டோச்பிரோசிஸ், பார்வோ வைரஸ், பேரா இன்புளுயன்சா போன்ற நோய்களுக்கான கூட்டு தடுப்பூசியும், 21 நாட்கள் இடைவெளியில் மறுமுறை தடுப்பூசியும் செலுத்த வேண்டும்.
பார்த்திபன்,
கால்நடை டாக்டர்
விருதுநகர்
95979 27728
நாய், பூனைகளை தாக்கும் பார்வோ வைரஸ்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!