dinamalar telegram
Advertisement

இனிக்கும் வெல்லமாக எம்ஜி அஸ்டர்

Share

நவீன அம்சங்களுக்கு எம்ஜி அஸ்டர் எஸ்யூவி தான் பெஸ்ட். இதன் விலை முதன்முறையாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஸ்டைல், சூப்பர், ஸ்மார்ட், ஷார்ப், சாவி என 5 வேரியன்ட்களில் கிடைக்கும்.
'டேஷ்போர்டில்' சுழலும் கண்களுடன் சிறிய 'ரோபோ' கொடுக்கப்பட்டிருக்கும். செயற்கை நுண்ணறிவு மூலம் மனிதர்களுக்கு உதவும். 'ஹலோ அஸ்டர்' என அழைத்து அன்றாட செய்திகள், ஜோக், விக்கிபீடியாவில் இருந்து தகவல்களை கேட்டு பெறலாம்.
எல்இடி புரொஜெக்டர் ஹெட்லேம்ப், 17 இன்ச் அலாய் வீல், 10.1 இன்ச் டச் ஸ்கிரீன் உடன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், 7 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், 6 ஏர்பேக்குகள், எமர்ஜென்சி பிரேக்கிங், பனோரமிக் சன்ரூப், 360 டிகிரி கேமரா, ஏபிஎஸ் பிரேக்கிங், ஆட்டோமேட்டிக் எமர்ஜென்சி பிரேக்கிங், குரூஸ் கன்ட்ரோல், டிரைவருக்கு உதவும் 'எடிஎஎஸ்' வசதி, இ-சிம் வாயிலாக ஜியோ இணைப்பு, 5 சீட்டர், ஸ்பீடு அசிஸ்ட் சிஸ்டம் சிறப்பம்சம்.
1.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் (108 பிஎச்பி பவர், 144 என்எம் டார்க் திறன்), 1.3 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல்( 138 பிஎச்பி பவர், 220 என்எம் டார்க் திறன்) என இரண்டு இன்ஜின் தேர்வில் கிடைக்கும். 5ஸ்பீடு மேனுவல்/ 8ஸ்டெப் சிவிடி/ 6ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன் உண்டு.
கடந்த ஆண்டு அக்டோபரில் ரூ.9.78-16.78 லட்சம் என்ற விலையில் அறிமுகமானது. தற்போது விலை ரூ.20,000 -35,000 அதிகரிக்கப்பட்டுள்ளது.

புதிய விலை: ரூ.9.98 - 17.73 லட்சம் (எக்ஸ்ஷோரும்)

சென்னை டீலர்:
FPL MG Motors Nandanam - 75500 73339
OMR 73387 33633

கோவை டீலர்: P P S Motors (p) ltd - 79935 55110

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (2)

  • RAJ - dammam,சவுதி அரேபியா

    Don't buy China products

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement