dinamalar telegram
Advertisement

பீட்ரூட் பச்சடி!

Share

தேவையான பொருட்கள்:
பீட்ரூட் - 2
துருவிய தேங்காய் - 0.5 கப்
தயிர் - 0.5 கப்
காய்ந்த மிளகாய் - 2
பச்சை மிளகாய் - 1
கடுகு, சீரகம், கறிவேப்பிலை, தேங்காய் எண்ணெய், இஞ்சி, தண்ணீர் - தேவையான அளவு.

செய்முறை:
பாத்திரத்தில் துருவிய பீட்ரூட், உப்பு, தண்ணீர் சேர்த்து, 10 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். அதில், தேங்காய், பச்சை மிளகாய், சீரகம், இஞ்சியை விழுதாக அரைத்து சேர்த்து கிளறி கொதிக்க விடவும். பின், தயிர் சேர்க்கவும்; இந்த கலவை கொதிக்கும் முன், அடுப்பை அணைக்கவும்.
வாணலியில், தேங்காய் எண்ணெய் சூடானதும் கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளித்து, கலவையில் சேர்க்கவும். சுவைமிக்க, 'பீட்ரூட் பச்சடி!' தயார்!
சாதத்துடன் பக்க உணவாக சேர்த்துக்கொள்ளலாம். அனைவரும் விரும்பி சாப்பிடுவர்!
- எஸ்.மோகன், சிவகாசி.
தொடர்புக்கு: 88702 74110

Share
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement