மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நாட்டாமங்கலத்தை சேர்ந்த விவசாயி அலெக்ஸ். உசிலம்பட்டி பகுதியில் விவசாயிகளுக்கு பாரம்பரிய நெல் ரகங்களை வழங்கி இயற்கை விவசாயத்தில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகளை உருவாக்கி தருகிறார். கடந்த ஆண்டு பாரம்பரிய மாப்பிள்ளை சம்பாவை மானாவாரி விதைப்பு, நாற்று பாவுதல் உள்ளிட்ட வழிகளில் பயிரிட்டு நல்ல மகசூல் எடுத்துள்ளார். வயலில் பாரம்பரிய நெல் ரகங்களை இயற்கை முறையில் விளைவித்து நெல் விதைகளை மீட்டெடுத்து இயற்கை விவசாயிகளுக்கு வழங்கி வருகிறார்.
அவர் கூறியதாவது: என் மனைவி பட்டுக்கோட்டையை சேர்ந்தவர் என்பதால் அவரின் வீட்டுக்கு செல்லும் போது பாரம்பரிய விவசாயிகளின் தொடர்பு கிடைத்தது. இந்த ரகங்கள் நோய்க்கு மருந்தாகவும் உள்ளது என்ற உண்மை அறிந்ததும் இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டேன். அங்குள்ள பாரம்பரிய நெல் ரகங்களை பயிரிட்ட போது நல்ல விளைச்சல் கிடைத்தது.
இரண்டரை ஏக்கரில் வையக்குண்டான், கலாபாத், கருப்பு கவுனி, செம்புலிச்சான் சம்பா, ஆத்துார் கிச்சிலி சம்பா ரகங்கள் பயிரிட்டு தற்போது அறுவடைக்கு தயாராக உள்ளது. இவற்றின் விதைகளை சேகரித்து இந்தப் பகுதியில் பாரம்பரிய நெல் பயிரிட விரும்பும் விவசாயிகளுக்கு வழங்குகிறேன். பயிரிடும் வழிமுறைகளையும், ஆலோசனைகளையும் அவர்களது தோட்டத்திற்கே சென்று வழங்கி வருகிறேன், என்றார்.
தொடர்புக்கு: 94871 86728.
மதிவாணன், உசிலம்பட்டி
சம்பா நெல் ரகங்களை மீட்டெடுக்கும் விவசாயி
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!