சொட்டுநீர் பாசனத்தில் பயிருக்கு தேவையான உரங்களையும் தண்ணீரோடு கலந்து பயிருக்கு அருகில் சமச்சீராக அளிக்கும் முறையே சொட்டு நீர் உரப்பாசனம். சாதாரணமாக உரங்களை மண்ணில் இடுவதால் பயிருக்கு 50 சதவீத சத்துக்களே கிடைக்கிறது. மீதமுள்ள 50 சதவீத சத்துக்கள் வீணாகிறது. சொட்டுநீர் உரப்பாசனத்தில் திரவ உரங்கள் அல்லது நீரில் முற்றிலும் கரையும் உரங்களை அளிப்பதால் உரத்தின் பயன் 80 - 90 சதவீதம் அதிகரிக்கிறது. தாவர சத்துக்கள் விரையமாவது தடுக்கப்படுவதுடன் பயிரின் மகசூலும் மேம்படுத்தப்படுகிறது. நீரும் உரமும் செடிகளின் வேர் பாகத்தை நேரடியாக சென்றடைவதால் சத்துக்கள் எளிதாக எடுத்துக் கொள்ளப்படுகின்றன. பயிருக்கு தேவைப்படும் நீரையும் உரத்தையும் துல்லியமாக கணக்கிட முடியும்.
விதைக்கும் பொது அதிக மணிச்சத்து, வளர்ச்சிப் பருவங்களில் தழை மற்றும் சாம்பல் சத்து, முதிர்ச்சி பருவத்தில் கூடுதல் சாம்பல் சத்துக்களை தேவைக்கேற்ப தேர்வு செய்து குறைந்தளவில் சிக்கனமாக வழங்கலாம். நுண்ணுாட்டச் சத்துக்களை திறம்பட அளிக்க முடியும். திராட்சை, வாழை, பழ வகை, காய்கறி பயிர்களில் சாம்பல் சத்து அதிகம் கொண்ட உரங்களை தேர்வு செய்து அளிப்பதால் தரத்தை மேம்படுத்தி கூடுதல் லாபம் பெறலாம். உரத்தின் தேவை 25 சதவீதம் வரை குறைக்கலாம். இந்த முறையில் நீர் சேமிப்பு, நேரம், ஆட்செலவு அனைத்தையும் மிச்சப்படுத்தலாம்.
யூரியா, பொட்டாஷ் உரங்கள் எளிதில் கரையும். தழை, சாம்பல் சத்துக்கு இவற்றை பயன்படுத்தலாம். சூப்பர் பாஸ்பேட் பயன்படுத்தக்கூடாது. இதற்கு மாற்றாக பாஸ்பாரிக் அமிலம் திரவ வடிவில் பயன்படுத்தலாம்.
- இளையராஜன்
இணைப்பேராசிரியர், மண்ணியல் துறை
பன்னீர்செல்வம்,
இயக்குனர் நீர் நுட்ப மையம்,
வேளாண்மை பல்கலை, கோவை
94436 73254
சொட்டுநீரில் உரப்பாசனம் செய்வது எப்படி
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!