dinamalar telegram
Advertisement

'லைக்ஸ்' ஹைலக்ஸ்

Share

மிரட்டலான டொயோட்டா ஹைலக்ஸ் பிரிமியம் பிக்-அப் டிரக் மீது அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. வரும் ஜனவரியில் விற்பனைக்கு வர உள்ளது.

இதன் 2.8 லிட்டர் டீசல் இன்ஜின், 201 பிஎச்பி பவரையும், 500 என்எம் டார்க் திறனையும் அளிக்கும். மற்றொரு 2.4 லிட்டர் டீசல் இன்ஜின்(150 பிஎச்பி பவர், 360 என்எம் டார்க் திறன்) மாடலும் அறிமுகமாக வாய்ப்பு உள்ளது. 5,6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொடுக்கப்படலாம். 0-100 கி.மீ., வேகத்தை 10 வினாடியில் எட்டும்.

எல்இடி ஹெட்லைட்டுகள், 5.3 மீட்டர் நீளம், இரண்டு இருக்கை வரிசை அமைப்பு, ஸ்டீல் வீல், டைனமிக் ரேடார் குரூசர் கன்ட்ரோல், டிஜிட்டல் ரேடியோ, 5 சீட்டர், 8.0 இன்ச் டச் ஸ்கிரீன் உடன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், 4.2 இன்ச் மல்டிஇன்போ டிஸ்பிளே, நான்கு வீல் டிரைவ் சிஸ்டம், சாட்டிலைட் நேவி கேஷன், ஏபிஎஸ் பிரேக்கிங், ஆட்டோ மேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், ஆம்பியன்ட் லைட், புஷ் -பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப், ஆட்டோமேட்டிக் வைப்பர் சிறப்பம்சம்.

எதிர்பார்க்கும் விலை: ரூ.25 லட்சம் (எக்ஸ்ஷோரூம்)

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement